நரேந்திரமோடியை நாட்டின் பிரதமராக்க விரும்பும் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் பாஜக.,வின் மாநில செயற்குழு கூட்டம் புதன், வியாழக் கிழமைகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏற்காடு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் நேரடிப்போட்டியில் களம் இறங்கியுள்ளன. இது சட்டப்பேரவை இடைத்தேர்தல் என்பதாலும், அடுத்துவரும் மக்களவைத்தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதாலும், ஏராளமான பணிகள் உள்ளன. இதனால் இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடவில்லை. இத்தேர்தலில் வேட்பாளர்களில் யார்நல்லவரோ, அவருக்கு வாக்களியுங்கள்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பா.ஜ.க.,வின் ஒன்றிய பொதுச்செயலாளர் ஜவஹர் ஒருகும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை இக்கொலை குறித்து முழுவிசாரணை நடத்த வேண்டும்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சிலையை அகற்ற முயற்சி நடந்துவருகிறது. சிலை அமைப்பதற்கு முன்பே அந்த இடத்தில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கான இடையூறு குறித்த ஆராய்ந்தபின்பே சிலை அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், முந்தைய அரசு சிலை வைத்தது என்பதற்காக அதனை அகற்ற நினைப்பது கலைத்துறையில் உலக அளவில் புகழ்பெற்ற தமிழரை அவமதிப்பதுடன், இது தமிழ் சமுதாயத்தையும், கலைத்துறையையும் அவமானப்படுத்தும் செயலாகும்.
மீனவர்பிரச்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர்களின் உண்மைநிலை அறிய இந்திய அரசு எந்தவிசாரணையும் மேற்கொள்ளாமல், இலங்கை அளித்த தண்டனையை அமல்படுத்துவது சொந்தபிள்ளையை கழுத்தை நெரித்து கொல்லுவதற்கு சமமாகும்.
மத்திய அரசு பலமற்ற அரசாக உள்ளது. இந்தியாவை நோக்கி சீனா, பாகிஸ்தான் வந்து விட்டது என பதறும் நிலையை போக்கிடவும், தமிழர்கள் காக்கப்பட வேண்டுமானால் இந்தியாவில் பலம்பொருந்திய பிரதமர் ஆட்சி செய்யவேண்டும்.
அதற்காக காங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறிந்து, மோடியை பிரதமராகக்கவேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க வலுவுள்ள பலமான கட்சியாக உருவெடுத்து வருகிறது. நரேந்திரமோடியை பிரதமராக்க நினைக்கும் கட்சியுடன் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி அமைக்கும். மோடியை பிரதமராக்க அனைத்துகட்சிகளும் ஆதரவுதர வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் அரசியல்கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிக்க தனித்துபோட்டியிட வேண்டும் என்பதை வரவேற்கிறோம்.
கூட்டணியமைத்து போட்டியிடும் நிலையில் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றிபெறும் என்றார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.