‘என்னை வீழ்த்தநினைக்கும், காங்கிரசின் முயற்சிகள் தோல்வியடையும், மக்களைசந்திக்க காங்கிரஸ் பயப்படுகிறது” என்று , பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர், நரேந்திரமோடி கூறியுள்ளார்.
டில்லி சட்டசபைக்கு, 4ம்தேதி தேர்தல் நடக்கிறது. பாஜக., வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்டும் வகையில், கிழக்கு டில்லியில் நடந்த, தேர்தல் பிரசாரகூட்டத்தில் மோடி பேசியதாவது:
நான் நிறைய தேர்தலை சந்தித்துஇருக்கிறேன். அங்கே அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையே போட்டியிருந்தது. ஆனால், முதல்முறையாக இந்ததேர்தலில் மக்களுக்கிடையே போட்டி நடக்கிறது. இதுவே ஜனநாயகத்தின் உயர்வான நிலை.
இங்கு அரசியல்கட்சிகள் என்ன செய்து இருக்கின்றதோ அதைப்பற்றி பேசியாகவேண்டும். ஆனால், ராஜஸ்தான், டெல்லியை ஆட்சியாளர்கள் தாங்கள் செய்ததுபற்றி பேசவில்லை. பணவீக்கம் முக்கியப்பிரச்சினை இல்லையா?. இந்தபிரச்சாரத்தின் போது அதைப்பற்றி அந்த கட்சியின் முக்கியத்தலைவர்கள் பேசவில்லை.
பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவை குறித்து ஆளும் காங்கிரஸ்அரசு கவலைப்படுவதே இல்லை. அவை, ஏழைமக்களுக்கு தான் முக்கியபிரச்னையாக உள்ளது. மத்தியில், மொரார்ஜிதேசாய், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, விலைவாசி கட்டுக்குள் இருந்தது; இப்போது கட்டுமீறி உள்ளது;
கட்டுப்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மக்களைசந்திக்க காங்கிரஸ் பயப்படுகிறது. அதனால்தான், முக்கிய பிரச்னைகளுக்கு எல்லாம், குஜராத்திடம் இருந்து, தீர்வை எதிர்பார்க்கின்றனர். குஜராத்தில் நடந்த சட்ட சபை தேர்தலின்போது, சமூக இணையதளங்கள் மூலம், என்னையும், என் அரசையும் கவிழ்த்துவிடலாம் என, காங்கிரஸ் எவ்வளவோ முயற்சித்தது. அவற்றை, குஜராத்திமக்கள் தோற்கடித்தனர். அதுபோல், இப்போது அந்த கட்சி மேற்கொள்ளும் முயற்சிகள் தோற்கடிக்கப்படும்.
பீகாரும், உபி.,யும் வளர்ச்சி அடைந்திருந்தால், ஏழைமக்களின் நலன்கள் குறித்து யோசித்திருந்தால், இத்தனைலட்சம் பேர், அங்கிருந்து இங்கு, இடம் பெயர்ந்திருப்பார்களா? எங்கள் மாநிலத்தின் சூரத்நகரிலும், ஒடிசா, பீகார், ஆந்திராவை சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு, நாங்கள், அனைத்து நல உதவிகளையும் வழங்கி யுள்ளோம். நம்நாட்டின் பிரதமர், சிறந்தபொருளாதார மேதை; நிதியமைச்சரும் நிறையபடித்தவர். விலைவாசியை ஏன், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை…
விலைவாசி ஏன் உயர்ந்துள்ளது எனகேட்டால், ‘ஏழைகள் நிறைய, காய்கறிகள், பழங்கள்சாப்பிடுவதால்’ என, மத்திய அமைச்சர் ஒருவர் பதிலளிக்கிறார். குஜராத்தில், ‘ஒருநாள் நிர்வாகம்’ என்ற பெயரில், அனைத்து, அரசுத் துறை தகவல்களையும், ஒரேநாளில் பெற வைத்துள்ளோம். அதைஏன், டில்லி, காங்கிரஸ் அரசால் மேற்கொள்ள முடியவில்லை? என்று மோடி கேள்வி எழுப்பினார்.
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.