நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் , டெல்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் பாஜக.,வே ஆட்சியை பிடிக்கும் என்று ஓட்டுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன .
ஐந்து மாநில சட்ட சபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து எந்த மாநிலங்களில், எந்தகட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதற்கான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தியாடுடே மற்றும் ஓஆர்ஜி., நடத்திய கருத்துக் கணிப்பில், ம.பி., மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக., மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.பி.,யில் மொத்தமுள்ள 230தொகுதிகளில் பா.ஜ.க.,வுக்கு 128 இடங்களும், காங்கிரசுக்கு 92இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 9 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சத்தீஸ்கரின் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக, 44 இடங்களையும், காங்கிரஸ் 41 இடங்களையும், பகுஜன் 2 இடங்களையும் பிடிக்கிறது.
ராஜஸ்தானில்ல் மொத்தமுள்ள இடங்கள் 200. இதில் பாஜக., 130 இடங்களைப் பிடித்து ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 48தொகுதிகள் மட்டுமேகிடைக்கும் என்றும், பகுஜன் 4 இடங்களைப் பிடிக்கும் எனவும்தெரிகிறது. மற்றவர்கள் 17 இடங்களில் வெற்றிபெறலாம் என கூறப்பட்டுள்ளது.
டில்லி சட்ட சபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.,32 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் . காங்கிரசுக்கு 21 இடங்களும், ஆம் ஆத்மிகட்சிக்கு 16 இடங்களும் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன .
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.