மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வுசெய்வதற்காக பாஜக.,வின் தேசியசெயற்குழு வருகிற ஜனவரி 17ந்தேதி கூடுகிறது.
.
பாஜக மூத்த தலைவர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அவர்கள் அடுத்தக்கட்ட பணிகளில் தீவிரம்காட்ட தொடங்கியுள்ளனர். கடந்த 3 நாட்களாக டெல்லியில் மாநில பாஜக தலைவர்களின் ஆலோசனைகூட்டம் நடந்தது. அதில் வாக்காளர்களை கவரும்வகையில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்தக் கட்டமாக வரும் 24-ந்தேதி பாஜக.,வின் பிரசாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பாஜக.,வின் பிரசார வியூகத்துக்கு இறுதிவடிவம் தரப்பட உள்ளது.
காங்கிரஸ் அரசின் இமாலய ஊழல்களை மக்களிடம் தெரியப் படுத்தும் விதமாக எத்தகைய புதுமையான பிரசாரம்செய்யலாம் என்று அந்த கூட்டத்தில் வரையறுக்கப்படும். இது தவிர பாஜக மூத்த தலைவர்கள் எந்தெந்த நகரங்களில் சூறாவளிபிரசாரம் செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பபட உள்ளது.
இதையடுத்து அடுத்தமாதம் (ஜனவரி) 17-ந்தேதி பாஜக செயற்குழு கூடுகிறது. அடுத்தடுத்த நாட்களில் (18,19-ந் தேதிகளில்) பாஜக தேசியக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அந்தகூட்டங்களில் பாஜக வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதற்காக எல்லாமாநில தலைவர்களிடமும் வேட்பாளர்கள் பெயர், அவர்களது தகுதி, திறமைபற்றிய விவரங்களை உரிய பரிந்துரையுடன் தருமாறு பாஜக தேசியதலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜக தேசியகுழுவில் வேட்பாளர்கள் தேர்வு ஆய்வுசெய்யப்படும். அதன் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல்பட்டியல் வெளியிடப்படும்.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.