நரேந்திரமோடி பிரதமரானால் நாட்டுக்கு பேரழி என கூறியுள்ள பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக பத்திரிகையாளர்களை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்மோகன்சிங் பதில் அளித்தார். அப்போது
பாஜக பிரதமர் வேட்பாளராக குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த மன்மோகன்சிங், நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றால் பேரழிவு ஏற்படும். அவர் முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதனால் நாட்டின்மதிப்பு குறைந்தது என்றார்.
பிரதமரின் இந்தபதிலுக்கு பாஜக அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். சிறப்பு புலனாய்வுகுழு விசாரணையிலும் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் நரேந்திரமோடி குற்றமற்றவர் என்று தீர்ப்புகூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க மன்மோகன்சிங் அவ்வாறு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
குஜராத் மாநிலத்தில் கலவரம் நடந்த போது மன்மோகன்சிங் பிரதமராக இல்லை. மத்தியில் இரட்டை ஆட்சி முறைக்கு வழி ஏற்படுத்திகொடுத்தவரே மன்மோகன் சிங்தான். அதனால் தான் பிரதமரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பிரதமரின் இந்தபேட்டி, மத்தியில் பாஜக விரைவில் ஆட்சிக்குவரும் என்பது உறுதி. மேலும் அடுத்து மத்தியில் ஐ,மு,,கூட்டணி ஆட்சிக்குவராது என்று பிரதமரே கூறியுள்ளார்.
அதனால் தான் மூன்றாம் முறையாக பிரதமராக பதவி ஏற்கமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். மோடி ஆட்சியில் குஜராத் மாநிலம் பெரும்வளர்ச்சியை கண்டுள்ளது. நாட்டிலேயே ஒரு முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. அப்படியிருக்கையில் மன்மோகன்சிங் கூறியிருப்பது நகைப்புக் குரியது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க முடியவில்லை என்றும் விலைவாசி உயர்வை குறைக்கமுடியவில்லை என்றும் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றும் மன்மோகன்சிங்கே ஒப்புக் கொண்டுள்ளார். ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக பேட்டி அளித்து மன்மோகன்சிங், அவருடைய சாதனைகளை பட்டியலிட்டுக் கூறாமல்,தோல்வி ஏற்பட்டதை கூறியுள்ளார். இதிலிருந்து மத்தியில் ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்து நாட்டின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்று ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.