சிறுபான்மை இளைஞர்கள் கைது நடவடிக்கையின்போது கவனமாக இருக்குமாறு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளதற்கு எதிர்ப்புதெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார் . சிறுபான்மை இன
இளைஞர்களை கைதுசெய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குஜராத் முதல்வரும் பா. ஜ. க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி இந்தவிவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில், சிறுபான்மை இனத்தவர் தொடர்பான ஷிண்டேயின் அறிவுறுத்தல் பலகேள்விகளை எழுப்பியிருக்கிறது. நாட்டின் அனைத்து சமூகத்தினருமே சம நிலையில் தான் நடத்தப்படவேண்டும். எந்த ஒருசமூகத்தை அல்லது இனத்தைச் சேர்ந்தவருமே பாதிக்கப்படக்கூடாது என்பது தான் சரியான நிலைப்பாடாக இருக்கவேண்டும் என்று அதில் மோடி வலியுறுத்தியுள்ளார்.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.