கர்நாடக சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவராக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக பேரவைக் குழுத்தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டரை அங்கீகரித்துள்ளதாக பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேரவைத் தலைவர் காகோடு திம்மப்பா தெரிவித்துள்ளதாவது;
கர்நாடக ஜனதா கட்சியைச்சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் நான்குபேர் பாஜகவில் சேர கடிதம் அளித்திருந்தனர். இதையடுத்து, சட்டப் பேரவையில் பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. இதனடிப்படையில், பேரவையின் எதிர்க் கட்சி அந்தஸ்து பா.ஜ.க.,வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவராக ஜெகதீஷ்ஷெட்டரை நியமிக்கும்படி, பாஜக மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஏற்று சட்டவிதிகளின்படி, ஜெகதீஷ் ஷெட்டரை எதிர்க் கட்சித் தலைவராக நியமித்து உத்தரவிடுகிறேன் என்றார் காகோடு திம்மப்பா.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.