டெல்லி: தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல் விவகாரம் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜை நேரில்சந்தித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று சுஷ்மா சுவராஜின் வீட்டுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா சென்றார். சுஷ்மாவிடம் தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட 5
முக்கியப் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை குறித்து விளக்கினார்.
சமீபத்தில் தமிழக மீனவர் பிரச்சினையை ஐ.நா. சபைக்குக் கொண்டு போகப் போவதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி சென்னையில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சுஷ்மாவை கிருஷ்ணா நேரில் சந்தித்து விளக்கம் தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நிவாரண பணிகள், அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி மாட்டிய விவகாரம், எகிப்தில் தவிக்கும் இந்தியர்களை விமானத்தில் இந்தியா அழைத்து வருதல், சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பது ஆகிய 5 பிரச்சினைகள் பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா என்னிடம் விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் திருப்தி அளிப்பதாக இருந்தது.
வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு சென்று, இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி பேசினார் என்றும், இந்த பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும் என்னிடம் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
இலங்கை தமிழர் பிரச்சினையும், தமிழக மீனவர் பிரச்சினையும் தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்கியமாக பிரதிபலிக்கும். மேலும் கட்சி ரீதியாக தமிழ்நாட்டின் பொறுப்பை நான் ஏற்று இருப்பதால், இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.
இலங்கை தமிழர் நிவாரண பணிக்காக இதுவரை ரூ.500 கோடி இலங்கைக்கு கொடுத்து இருப்பதாகவும், இன்னும் தேவைப்பட்டால் கொடுக்க தயார் என்றும், என்னிடம் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
{qtube vid:=L42N8bG65vY}
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.