பாஜக.,வின் தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி தந்தார் . அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி, எவ்வித யோசனையும் இன்றி குஜராத் அரசு மற்றும் நரேந்திரமோடியை கண்மூடித்தனமாக தாக்குவதிலேயே குறியாக உள்ளது . இது காங்கிரஸ் கட்சியின் தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே
உள்ளது. வறுமைக் கோட்டு நிலையை நிர்ணயிப்பது மத்திய அரசின் வேலையாகும். குஜராத் அரசு இதனை நிர்ணயிக்கவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது குறித்து குஜராத் மாநில அரசு, 2004-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசுக்கு எழுதிய எந்த கடிதத்துக்கும் இதுவரை எவ்விதபதிலும் இல்லை.
எனவேதான் நரேந்திர மோடி திட்டக் கமிஷனை கடுமையாக விமர்சனம்செய்தார். ஊழல் மலிந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மிகட்சி ஆட்சியில் தொடர்ந்து வருகிறது. அவர்கள் வெளியிட்ட ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியலில் ஷீலா தீட்சித் பெயரை சேர்க்கும் தைரியம் அவர்களுக்கு கிடையாது. காங்கிரஸ்கட்சி மற்றும் அதன் தலைமை மீது இன்றுவரை ஆம் ஆத்மி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்போது மக்களிடம் ஆதாரங்கள் கேட்கிறார்கள். அப்படியானால், இவர்கள் ஆட்சிக்குவருவதற்கு முன்பு எவ்வித சாட்சியங்களும் இன்றி வெறுமனே குற்றச்சாட்டுகளை வீசிக்கொண்டிருந்தார்களா? டெல்லியில் பால்விலை, மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆம் ஆத்மிகட்சியின் வாக்குறுதி என்னவாயிற்று? டெல்லியில் முறையாக ஆட்சி நடத்துவதைவிட்டு நாளுக்கொரு குற்றச்சாட்டை யார்மீதாவது எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வீசிவருகிறது. முதலில் இவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இவர்கள் கவனம்செலுத்தட்டும் என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.