நாடாளுமன்ற அமளிக்கு தனிப்பட்டமுறையில் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு

 நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிக்கு தனிப்பட்டமுறையில் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம், இந்திய மக்களாட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தி விட்டது. இதற்கு, தனிப்பட்ட முறையில் காங்கிரஸ்கட்சியே பொறுப்பாகும். அவரது உறுப்பினர்களை காங்கிரஸ் தலைமையால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாடாளுமன்றத்தில் அவர்கள் விரும்பத்தகாத காட்சிகளை அரங்கேற்றிவிட்டனர். இதில் ஈடுபட்ட அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரிவித்தார்.

மேலும், மக்களவை நடவடிக்கைகளை முடக்குவதற்கு அபாயகரமான மற்றும் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. இது, இந்திய மக்களாட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டும், காங்கிரஸின் உறுப்பினர்கள் கட்டுப்படுத்தப்பட்டும் இருந்தால் இந்தசம்பவம் நடைபெறாமல் தடுத்து இருக்கலாம் என்று தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகண்ட் மாநிலங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. அப்போது அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால்தான் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லை என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...