தனித்தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து வரும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்துவிலகி தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர சட்டத் துறை அமைச்சர் எரசு பிரதாப்ரெட்டி, நேற்றே பதவிகளை ராஜினாமாசெய்ய முடிவு செய்திருந்ததாக தெரிவித்தார். எனினும் நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதா இன்னும் தாக்கல் செய்யப் படவில்லை என பாஜக கூறிவருவதை சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாகவே முதலமைச்சர் ராஜினாமா செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் சட்டமுறைப்படி தாக்கல் செய்யப்படும் போது கிரண் குமார் ரெட்டியும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் பதவி விலகுவார்கள் என்றும் பிரதாப்ரெட்டி கூறினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.