காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி என்னை விட 10 வயது மூத்தவர், எனவே அவர் இளைஞர் அல்ல என்று பா ஜ ௧ எம்.பி., வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
வருண் காந்தி உத்தர பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதி பார்வையிட சென்றார் பல்வேறு ஆற்றங்கரையோரங்களில் மட்டும் 1 கோடி பேர் வசிக்கிறார்கள் . வெள்ளத்தினால் பாதித்த அவர்களுக்கு சரயான நிவாரண திட்டம் ஏதும் ஏற்படுத்த படவில்லை. ராகுல் அடிக்கடி உத்தர பிரதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். அவரை பார்த்து நான் இந்த பணியை மேற்கொள்ளவில்லை. ஆனால், ஒவ்வொரு தொகுதியாக சென்று மக்களின் குறையை கேட்டு வருகிறார். அவரது இந்த பணி பாராட்டுக்குரியது.
ராகுல் என்னை விட 10 வயது மூத்தவர். எனவே, அவர் என் தலைமுறையை சேர்ந்தவர் அல்ல. ஆனால், கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அடித்தட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் செயல்பட வேண்டும். அவர்களது செயல் ஏழைகளுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். மக்களின் ஏற்றத்தாழ்வில் நாமும் பங்கு கொள்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
நான் அரசியலுகு வந்தது பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. மக்களுக்கு உதவுவதற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் தான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய எம்.பி., சம்பளம் முழுவதையும் நன்கொடையாக அளித்து விடுகிறேன். என்னுடைய ஊதியம் ஏழை மக்களுக்கு பயன்படுவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு வருண் கூறினார்.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.