ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
நடைபெறவுள்ள 16வது நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயககூட்டணி வெற்றிபெறும். நான் 1ம் தேதி இதே அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, நாடெங்கும் நரேந்திரமோடி அலைவீசுகிறது. பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி பெரும்பாண்மை பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும். அதுமட்டுமல்ல தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ, காங்கிரஸ் ஆதரவைபெற்றோ அல்லது காங்கிரசுக்கு ஆதரவுதந்தோ ஆட்சி அமைவதற்கு முனையக்கூடும் என எந்த கட்சிகளை நாங்கள் கருதுகிறோமோ அந்தக் கட்சிகளோடு எந்த காரணத்தைகொண்டும் நாங்கள் உடன்பாடு வைத்துக் கொள்ளமாட்டோம். பஞ்சாப்பில் அகாளிதளம் எப்படி பா.ஜ.க.,வோடு ஒரு உடன்பாடு வைத்துள்ளதோ, அந்நிலைப்பாட்டை தமிழகத்தில் ம.தி.மு.க பின்பற்றும் என்று குறிப்பிட்டேன்.
இந்த உடன்பாடு வருவதற்கு பாடுபட்டவர் தமிழருவிமணியன். மேலும் அனைத்து தரப்பினரிடமும் பேசிய மிகப் பெரிய அணியாக வருவதற்கு பாடுபட்டவர் பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் இந்தகூட்டணியில் இணையவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். அப்போதுதான் இந்த கூட்டணி வலுவாக இருக்கும். நாடுமுழுவதும் நரேந்திரமோடி அலை வீசுகிற நேரத்தில் தமிழகத்தில் இந்த அணியும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அணி அமையவேண்டும் என்று விரும்பினேன். அப்படிப்பட்ட அணி அமைந்து ராஜ்நாத்சிங் கடந்த 20ஆம் தேதி அறிவித்த போது நான் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானேன். என்று கூறினார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.