பா.ஜ.க தலைமையிலான கூட்டணியின் மூலம் தமிழகத்தில் மாபெரும் அரசியல்மாற்றம் உருவாகும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத்தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை குமரிமாவட்டம் வந்தார். அவருக்கு ஆரல்வாய் மொழியில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், தோவாளையில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலில் சுவாமிதரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.
தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அதிமுக, திமுக தலைமையில்லாமல் பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, கொங்கு நாடு மக்கள்தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பிற 41 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணி தமிழகத்தில் முதல்நிலை கூட்டணியாகும்.
இந்தக்கூட்டணி மூலம் தமிழகத்தில் மாபெரும் அரசியல்மாற்றம் ஏற்படும். கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் விஜய காந்த், ராமதாஸ், வைகோ, ஈஸ்வரன், பச்சமுத்து ஆகியோர் முழு வீச்சில் பிரசாரம்செய்து வருகின்றனர்.
மீனவர்பிரச்னை: தமிழகத்தில் மீனவர் பிரச்னையை தீர்க்க ஒரேவழி நரேந்திரமோடி பிரதமராக வரவேண்டும். அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற அடுத்த நிமிடமே இலங்கை தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும்.
அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும். பாஜக தனி மெஜாரிட்டியுடன் 275 இடங்களைக் கைப்பற்றும். பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணிக் கட்சிகளை நாங்கள் கௌரவிப்போம்.
கோவை பாஜக வேட்பாளர் மாற்றப்படவேண்டும் என்ற பிரச்னை தொடர்பாக கருத்துச்சொல்ல முடியாது. அது உள்கட்சி விவகாரம்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இலங்கையில் 2 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதைத்தடுக்க தவறிய காங்கிரஷுக்கு இது தண்டனைக் காலம். தண்டனை இந்தத்தேர்தலில் நிறைவேற்றப்படும்.
தேர்தலில் போட்டியிடாமல் ப. சிதம்பரம் விலகி இருப்பதை விட அரசியலில் இருந்து அவர் விலகுவது நல்லது. கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். அந்தப்பகுதியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மற்றும் கல்லூரிகள், தொழிற்பேட்டைகள் உருவாக்கவேண்டும். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொழில்தொடங்க உரிமம் வழங்க வேண்டும். கூடங்குளம் பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை.
குமரிமாவட்டத்தில் குளச்சல் துறை முகம், விமான நிலையம், சாலை மேம்பாட்டு வசதிகள் செய்யப்படும் என்றார் அவர்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.