மேலிடம் கேட்டு கொண்டதற்க்கு இணங்க கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார் இதில் வங்கி முதலீடுகள், விவசாய நிலங்கள், விவசாயமற்ற நிலங்கள்,அசையும் சொத்துகள், பங்குகள், தங்கம், வெள்ளி நகைகள், ஆயுள் காப்பீட்டு முதலீடுகள், என்ற தலைப்பின் கீழ் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்,
ஷிகாரிபுரா தாலுகாவில் 13.21 ஏக்கர் நிலம்,
சிகாரிபுரா தாலுகாவில் 5.2 ஏக்கர் நிலம்.
ஷிகாரிபுராவில் மூன்று குடியிருப்பு வீடுகள்.
ஷிகாரிபுராவில் ஒரு குடியிருப்பு வீடு.
ஷிரலாகொப்பாவில் விவசாய நிலம் 9.12 ஏக்கர் ,
பெங்களூரு ஆர்.எம்.வி. செகண்ட் ஸ்டேஜில் ஒரு வீடு, (இந்த இடம் 1997மே 27ல் பி டி ஏ ஒதுக்கியது, 1999 பிப்ரவரியில் வீடு கட்டப்பட்டது )
ஸ்கார்பியோ மற்றும் காண்டஸா கார்ககள் வாங்கி விற்கப்பட்டுள்ளன.
தங்க, வைர நகைகள் 2 ஆயிரத்து 596 கிராம்
வெள்ளி பாத்திரங்கள் , நகைகள், 76 கிலோ
8வங்கிகளில் சேர்த்து மொத்தம்31 லட்சத்து 24 ஆயிரத்து 169ரூபாய் இருப்பு உள்ளது.
1.70 லட்சம் எல்ஐசி, பாலிசி எடுக்கப்பட்டுள்ளது.
10 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உயோகப்பொருட்கள் .
1984 நவம்பர் 22ல் கெய்தான் நிறுவனத்தில் 70 பங்குகள் வாங்கப்பட்டது.
ஷிகாரிபுரா சிவா கூட்டுறவு-வங்கியில் 20 ஆயிரம் ரூபாய் டெபாஸிட்.
1971 நவம்பரில் ஷிகாரிபுரா நகர வங்கியில் 100 பங்குகள் வாங்கப்பட்டது,
2000 ஜனவரியில் சாப்ட்வேர் டெக்குரூப்பில் 100 பங்குகள் வாங்கப்பட்டது,
2000 ஜனவரியில் ஜெனித் இன்போடெக்கில் 50 பங்குகள் வாங்கப்பட்டது.
எடியூரப்பா தனது வங்கி கணக்குகள், வீடுகள் மற்றும் நிலங்களை தனது சொந்த-தொகுதியான ஷிகாரிபுராவில் தான் வாங்கியுள்ளார். பெங்களூருவில் ஒரேஒரு வீடு மட்டுமே இருக்கிறது , அதுவும் பி.டி.ஏ., கொடுத்தது .
இதுபற்றி மேலும் அவர் தெரிவித்ததாவது எனக்கோ, எனது மகன்கள் மற்றும் மகள்களுக்கு ஸ்விஸ் – வங்கியில் எந்த கணக்கும் கிடையாது . வருமான வரிவிலக்கு வழங்கும் சொர்க்க நாடுகளிலும் எந்த வங்கி கணக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.