மோடியை பிரதமராக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பம் அதிகரித்துள்ளது

 நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பம் அதிகரித்துள்ளது என்று பாஜக. மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து ஜேட்லி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல்செய்ய சென்றபோது அவருடன் சென்ற ‘மனிதக்கடல்’ ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல, தன்னெழுச்சியாக ஏற்பட்டது. மோடிக்கு மக்கள்மத்தியில் உள்ள ஆதரவு வெளிப்பட்டுள்ள நிலையிலும், மோடி அலை ஏதுமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.

இதுவரை மோடி நாடுமுழுவதும் 400-க்கு மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார். அங்கெல்லாம் திரண்ட மக்கள்கூட்டம் இதற்கு முன் கண்டிராதவை. மோடியின் பிரச்சாரம் பாஜக அணியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எழுச்சியூட்டியுள்ளது. எதிர்த்தரப்பினரின் ஆத்திரமூட்டலைப் பொருட்படுத்தாமல் நல்லாட்சிக்கு செயல்திட் டத்தை வகுத்து உரையாற்றுவது தெளிவாகத் தெரிகிறது.

வடக்கு, மேற்கு, மத்திய இந்தியாவில், பா.ஜ.க.,வுக்கு கணிசமான ஆதரவுதளம் உள்ளதால் அங்கெல்லாம் மோடி அலை தென்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அதேநேரத்தில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அவர் மீது ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நல்லெண்ணம் பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகளை பெருமளவு அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் தங்களது ஆட்சியின் சாதனைகளைக் கூறி ஆதரவு திரட்டுவதற்கு மாறாக எதிர்மறைப் பிரச்சாரம் செய்துவருகின்றனர் என்று ஜேட்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...