மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் வங்கதேசத்தினர் வெளியேற்றப்படுவார்கள்

 பிகாரில் இருந்து இங்குவரும் மக்களையும், ஒடிஸாவிலிருந்து இங்கு வருவோரையும் மார்வாரிகளையும் விரட்டி அடிக்கிறீர்கள். ஆனால் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை தாராளமாக அனுமதிக்கிறீர்கள், மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்குவந்தால், நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் வெளியேற்றப்படுவார்கள் என்று பா.ஜ.க பிரதமர் பதவிவேட்பாளர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் செராம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது: இங்கு திரளாககூடி இருக்கும் சகோதர, சகோதரிகளே, நீங்கள் ஒன்றை இப்போதே எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 16ஆம் தேதிக்குப்பிறகு, நமது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் அனைவரும் மூட்டை, முடிச்சுகளை தூக்கிக்கொண்டு தங்களது நாட்டைநோக்கி வெளியேற வேண்டியிருக்கும்.

வாக்குவங்கியாக கருதி மம்தா பானர்ஜி வங்க தேசத்தினரை வெளியேற்றாமல் விட்டுவிட்டார். வங்க தேசத்தினரை மம்தா பானர்ஜி சிவப்புகம்பளம் விரித்து வரவேற்கிறார்.

பிகாரில் இருந்து இங்குவரும் மக்களையும், ஒடிஸாவிலிருந்து இங்கு வருவோரையும் மார்வாரிகளையும் விரட்டி அடிக்கிறீர்கள். ஆனால் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை தாராளமாக அனுமதிக்கிறீர்கள். அவர்களை மனமுவந்து வரவேற்கிறீர்கள்.

வாக்குவங்கி அரசியல் மூலம் மம்தா பானர்ஜி இந்நாட்டு மக்களை தொடர்ந்து அவமதித்துவருகிறார். இடதுசாரிகள் 35 ஆண்டுகள் இந்த மாநிலத்தை சீரழித்ததைவிட மம்தாபானர்ஜி 35 மாதங்களில் கூடுதலாக சீரழித்துள்ளார்.

இனி, வாக்குவங்கி அரசியல் ஒருபோதும் எடுபடாது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் நாட்டின்வளர்ச்சி, நல்லாட்சி குறித்துதான் பேசி வருகிறேன்.

நான் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து பேசும் போதும், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து பேசும் போதும், பெண்களுக்கான பாதுகாப்புகுறித்து பேசும்போதும் எதிர்க்கட்சியினர் பேசும் ஒரே வார்த்தை மதச்சார்பின்மைதான். அவர்கள் இதுதவிர வேறு எதுவும் பேசமுடியாது.

தற்போது மம்தா பானர்ஜி, சோனியாகாந்தி, இடதுசாரி கட்சிகள், மாயாவதி போன்றோர் வாக்குவங்கி அரசியலில் தான் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.