பாராளுமன்றத்திலே முழங்கவேண்டிய தலைவர்கள் எல்லாம் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டனர்

 வலுவான கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்றத்திலே முழங்கவேண்டிய தலைவர்கள் எல்லாம் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டனர். வெற்றி வாய்ப்பை இழந்து விட்டனர் என்று சொல்வதை விட வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றிதெரிவித்தார். நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–

350 இடங்களுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறும் என்று நான் நம்பிக்கை வைத்திருந்தேன். இன்று அந்தவெற்றி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இது போன்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழகமக்கள் ஒரே ஒரு இடத்தை, கூட்டணிக்கும் மற்றொரு இடத்தை பாஜக.,வுக்கும் தந்திருக்கிறார்கள். சிவாஜி கணேசன் பட பாடலை போலத்தான் எனது நிலை உள்ளது. நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன், சிரித்துக் கொண்டே அழுகின்றேன். வலுவான கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்றத்திலே முழங்கவேண்டிய தலைவர்கள் எல்லாம் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டனர். வெற்றி வாய்ப்பை இழந்து விட்டனர் என்று சொல்வதை விட வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.

இந்தசவாலை நாம் திறமையாக எதிர்கொள்ள வேண்டும். இதே தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணி அரசை ஏற்படுத்தியே தீர வேண்டும். குமரி மாவட்டத்தில் இது வரை இல்லாத அளவுக்கு பா.ஜ.க.,வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 5 முறை ஆட்சிபுரிந்த திமுக. டெபாசிட் இழந்துவிட்டது.மா. கம்யூனிஸ்டு டெபாசிட் இழந்தது. ஆம் ஆத்மி இருக்கும் இடமே தெரிய வில்லை. இதற்கெல்லாம் இந்த மேடையில் உள்ள தலைவர்களும், இங்குகூடியிருக்கிற நீங்களும்தான் காரணம். நீங்கள் மட்டும் அல்ல, இந்த மாவட்டத்தில் உள்ள லட்சக் கணக்கான தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

2016 சட்டமன்ற தேர்தலில் இந்தமாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் நாம் கைப்பற்றியே ஆகவேண்டும். இந்தகூட்டணி சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். நான் நரேந்திர மோடியை சந்திக்கும் போது இந்த மாவட்டத்தை பற்றி சொல்லுவேன். இந்தியாவில் உள்ள 672 மாவட்டங்களில் தலை சிறந்த 5 மாவட்டங்களுள் ஒன்றாக குமரிமாவட்டத்தை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம். குளச்சலில் துறைமுகம் கொண்டுவரப்பட்டே ஆகவேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், தொழில்வளமும் பெருகவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...