அமித் ஷா, அருண்ஜெட்லி ஆகியோருடன் மோடி ஆலோசனை

 மத்திய அமைச்சரவை அமைப்பதை முன்னிட்டு, பிரதமராக பொறுப்பு ஏற்கவுள்ள நரேந்திர மோடி, பாஜக பொதுச் செயலாளர் அமித்ஷா, பா.ஜ மூத்த தலைவர் அருண்ஜெட்லி ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றிபெற்ற புதிய பா.ஜ எம்.பிக்கள், மோடியை பா.ஜ நாடாளுமன்ற கட்சி தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கவுள்ளனர். 21ம் தேதிக்குப்பின் மோடி, பிரதமராக பதவி ஏற்பார் . டெல்லியில் உள்ள குஜராத் பவனில் தங்கியுள்ள மோடி கடந்த இருநாட்களாக பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து, அமைச்சரவை அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

இந்த ஆலோசனை நேற்றும் தொடர்ந்தது.குஜராத் பவனில் அமித் ஷா, அருண்ஜெட்லி ஆகியோருடன் மோடி நேற்றும் ஆலோசனை நடத்தினார். லோக்சபா தேர்தலில் அருண்ஜெட்லி தோல்வியடைந்தாலும், அவர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. முன்னாள் உ.பி முதல்வரும், பா.ஜ மூத்த தலைவருமான கல்யான் சிங்கும் மோடியை நேற்று சந்தித்து பேசினார். மத்திய அமைச்சரவை அமைப்பது குறித்து பா.ஜ தலைவர்கள் ராஜ்நாத் சிங் வீட்டிலும் நேற்று ஆலோசனை நடந்தது.

இது குறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், ”பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் புதிய எம்பி.க்கள் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கையும், ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் சந்தித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் உள்ள பழைய தொடர்பால் புதிய எம்பி.க்கள் இங்கு மரியாதை நிமித்தமாக வந்து, தேர்தலில் ஆர்எஸ்எஸ் ஆற்றிய பணிக்காக நன்றி தெரிவிக்கின்றனர். இன்று நடைபெறும் கூட்டத்தை பற்றித்தான் அவர்கள் பேசுகிறார்கள். வேறு எதையும் பற்றி பேசவில்லை” என்றார்.

மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மாசுவராஜ், நிதின் கட்கரி, அனந்த குமார், கல்யாண்சிங் உள்பட பலருக்கும் எந்த துறைகள் ஒதுக்கப்படலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மக்களவை தேர்தலில் பாஜக.வுக்கு பெரும்வெற்றியை பெற்றுத் தந்த உ.பி., பீகார், அசாம், குஜராத், ராஜஸ்தான், ம.பி. போன்ற மாநிலங்களுக்கு உரிய பிரதிநித்துவம் அமைச்சரவையில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...