பாஜக., மூத்த தலைவர் நிதின்கட்காரி தொடர்ந்த, அவதூறு வழக்கில், பிணைத் தொகை செலுத்த மறுத்ததை அடுத்து, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இரண்டு நாள் சிறைத்தண்டனை விதித்து, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர், திகார்சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த்கெஜ்ரிவால், சில மாதங்களுக்கு முன், இந்தியாவில், ஊழல்மிகுந்த அரசியல்வாதிகள் என்ற பட்டியலை வெளியிட்டார். இந்தபட்டியலில், பாஜக, மூத்த தலைவர் நிதின் கட்காரியின் பெயரும் உண்மைக்கு புறம்பாக இடம்பெற்று இருந்தது.
இதையடுத்து, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில், கெஜ்ரிவாலுக்கு எதிராக, கட்காரி, அவதூறுவழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கு, மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாஜிஸ்திரேட், இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கெஜ்ரிவால், 10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகைசெலுத்தி, ஜாமின் பெறலாம், என்றார். இதை ஏற்க மறுத்த கெஜ்ரிவால், நான், எந்த தவறும் செய்யவில்லை. செய்யாத குற்றத்துக்காக, ஜாமின்பெற விரும்பவில்லை நான் சிறை செல்ல தயாராக உள்ளேன் என்று வீரவசனம் எல்லாம் பேசினார் ,
ஜாமின் மனு தாக்கல் செய்வது, வழக்கமான நடைமுறை. கெஜ்ரிவால், இதை ஏன் ஏற்க மறுக்கிறார் என, தெரியவில்லை. ஏதாவது சிறப்புசலுகை கோருகிறாரா? என்று மாஜிஸ்திரேட் கோமதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், நான் எந்த சிறப்பு சலுகையும் கோரவில்லை, என்றார்.
இதையடுத்து, நீதிபதி கோமதி, தன் உத்தரவில் கூறியதாவது: கிரிமினல் வழக்குகளில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையே, இந்த வழக்கிலும் பின்பற்றப் படுகிறது. இந்த நடைமுறையில், தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, கெஜ்ரிவால் கூறுகிறாரா என தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர், தன் விருப்பத்துக்கு ஏற்ப, சட்ட நடைமுறைகளை தூக்கி எறிவதையும், சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதையும், இந்த கோர்ட், வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர், பிணைத்தொகை செலுத்த முடியாத அளவுக்கு ஏழை அல்ல. பிடிவாத போக்கு காரணமாக, பிணைத் தொகை செலுத்த மறுக்கிறார். எனவே, பிணைத் தொகை செலுத்த மறுத்த கெஜ்ரிவாலை, வரும், 23ம் தேதி வரை, சிறையில் அடைக்க, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார். அதிரடியான இந்த தீர்ப்பை எதிர்பார்க்காத கெஜ்ரிவால், அதிர்ச்சியில் உறைந்துபோனார். இதையடுத்து, போலீசார், அவரை, நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள, சிறைக்கு அழைத்துச்சென்று, காவலில் வைத்தனர். இதன்பின், திகார் சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். அங்கு, அவர், இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டிருப்பார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.