நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்தது சரியானதுதான் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
மே 26-ல் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 அழைப்பாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், பூடான் பிரதமர் ஸ்ரிங் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவுகள் அதிபர் அப்துல்லா யாமின் ஆகிய சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சார்க் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறை. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
"சார்க் நாடுகளின் தலைவர்களுள் ஒருவராக, இலங்கை அதிபர் ராஜபக்சே இருக்கிறார். இதன் அடிப்படையில்தான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசின் ஆதரவோடு, இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்தவர்தான் ராஜபக்சே. ஆனால், ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழர் நலனே காரணம். தனி ஈழம் அமைவது என்பது ராஜபக்சேவின் கையில்தான் உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகளை ராஜபக்சே வழங்க வேண்டும்.
தமிழகத்தில், 5.5 சதவீத ஓட்டுகள் பெற்று, மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை, பா.ஜ., பெற்றுள்ளது. இதற்காக, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்த, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,களுக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பதை, நான் சொல்ல முடியாது. யாரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற முடிவை, மோடி தான் எடுப்பார்.
தமிழகத்தின் முக்கிய கோரிக்கைள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான், எதிர்பார்ப்பு; அமைச்சர் பதவியல்ல. காங்., அரசு இருந்த போது, எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகத்துக்கு அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டன. அதனால், எந்த நன்மையும் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. எனவே, தமிழகத்துக்கு அமைச்சர்கள் முக்கியமல்ல, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை, தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடித்துவிட்டு, வீடு திரும்ப வேண்டும். இதற்கு, உரிய பாதுகாப்பை, மத்திய அரசு அளிக்க வேண்டும் என்பது தான், முதல் கோரிக்கையாக உள்ளது. தேசிய அளவில், சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பதை, மத வித்தியாசமின்றி, அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அளிக்க வேண்டும். மோடி தலைமையான அரசு, இந்தியாவை உலகளவில் முன்னேற்ற திட்டங்களை வகுத்து செயல்படுத்தும். இதற்கு, பார்லிமென்ட்டில் நடந்த பா.ஜ., கூட்டத்தில், மோடி ஆற்றிய உரையே சான்று. எனவே, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், மோடி அரசை, ஆறு மாதங்களுக்கு விமர்சிக்காமல், முழு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தில், 1967ல், தி.மு.க., ஆட்சியைப் பிடித்தபோது, 'இந்த அரசை, ஆறு மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டேன்' என, காங்., தலைவர் காமராஜர் கூறினார். அவரின், அரசியல் நாகரீகத்தை, இப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.