மோடி நிரூபிக்கப்பட்ட வெற்றியாளர்

 1. கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், இந்தியாவின் "கிரெடிட் ரேட்டிங்க்" அதல பாதாளத்துக்கு போய் ஜி-20 நாடுகள் உட்பட எதிலும், நம்மை சல்லிக்காசுக்கு கூட மதிக்காத நிலையில் மோடி பதவி ஏற்கிறார்..

2.–2013-14 ம் ஆண்டு நல்ல விளைச்சல். நல்ல தானிய கொள்முதல் மற்றும் கையிருப்பு அதிகம்..ஆனாலும் விலை வாசி இறங்க வில்லை..காரணம் கிடங்குகளில் தனியங்கள் சரியாக பாதுகாப்பின்றி அழுகி வருகிறது..தேவையான் இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கும் ஏற்பாடில்லை..காரணம் உணவு மந்திரி, "புரோக்கர்களின் கைய்யில்" விலை போன அவலம்..
இந்த சூழலில் மோடி பதவி ஏற்கிறார்..

3.சமூக ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய "உற்பத்தி செக்டார்" (production sector)மாபெரும் வளர்ச்சி பெற வேண்டும்..கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இத்துறை "நெகடிவ் குரோத்" அடைந்துள்ளது..இந்நிலையில் மோதியின் பதவி ஏற்கிறார்..

4.வங்கிகள்— தொழில் துறைக்கு கடன் கொடுக்க அஞ்சுகின்றன..வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய "என்.பி.ஏ" யும் ஏராளமாக நிலுவையில் உள்ளது..ஒரு வலுவான திறமையான "வங்கித்துறை" ஏற்படுத்த பட வேண்டும்..வங்கிகள் மடிந்த காலம் நரேந்திர மோடியின் பதவிகால தொடக்கமாக உள்ளது..

5.மின் வெட்டில் மூழ்கி இருக்கும் நாடு–மின் தேவை எறாளம்..தயாரிப்பு மிக குறைவு..இதை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் நரேந்திர மோடி–ஆனாலும் மின் மிகை மாநிலமாக குஜராத்தை மாற்றிய அவரது அனுபவம்–இதற்கு கை கொடுக்கும் என்றாலும் இது ஒரு மாபேரும் சவால் என்னும் சூழலில் பதவி ஏற்கிறார்.

6.மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய பொருட்கள்–அதனால் ஏற்படும் மாபெரும் அந்நிய செலாவணி "டிஃபிசிட்"-இதை சரி செய்யும் சவால் மோடிமுன்..இன்னிலையில் மோடி பதவி ஏற்கிறார்.

7. மின் தேவையை பூர்த்தி செய்ய சூரிய ஒளி மின் உற்பத்தி உட்பட எல்லாவகை மின் உற்பத்தியும் செய்ய வேண்டும்..இவற்றிக்காக அகில இந்திய அளவில் " சூரிய ஒளி மின் உற்பத்தி இணையம் " உருவாக்க வேண்டும் என மோடி அவர்கள் பேசி இருக்கிறார் என்பது அவரது ஞானத்திற்கு சான்று என்றாலும் இச்சவாலை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

8அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் "தங்க நாற்கர சாலை" அதை இவர் விரிவு படுத்த வேண்டும்..ரெயில் வே மற்றும் மற்றும் கடல் வழி போக்குவரத்தையும் இணைத்து, "ஒருகிணைந்த பன்முக போக்குவரது துறையை" ஏற்படுத்த வேண்டும்–இச்சவால்களை மோடி எப்படி செய்யபோகிறார்?

8.தனக்கு விசா தராத அமெரிக்காவை அலைய விட்டு சரித்திரம் படைத்த மோடி, மேலை நாடுகளை நம்பாமல், ஜப்பான், சிங்கப்பூர், சீனா மற்றும் இஸ்ரேல் ஆகியவைகளுடன் வியாபாரம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார் என்றாலும் அயல் உறவில், குறிப்பாக இலங்கை பாகிஸ்தானுடன் இவரது உறவு வளருமா வீழுமா? என்ற நிலையில் இவர் பொறுப்பேற்கிறார்..

9.கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவு சிரிப்பாய் சிரித்தது..உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு கை கொட்டி சிரித்தது..ராணுவ வீரர்களின் தலை கொய்தல், அருணச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆகிரமிப்பு, இலங்கை தமிழர்களுக்கு அநீதி, என்ற மிக இக்கட்டான நிலையில் மோடி பதவிஏற்கிறார்.

10.காஷ்மீர் சத்தீஷ்கர், அஸ்ஸாம், என உள்நாட்டுகலவரம், குண்டு வெடிப்பு– நக்சல் ஆதிக்கம், என்ற இந்த சோதனைகளை –மோடி எப்படி சரி செய்ய போகிறார்?..

11.அத்தனை பேருக்கும் அமைச்சர் பதவி, வழங்கி "இஷ்டத்துக்கு" அமைச்சர் நியமனம் செய்த சோனியாவின் குழப்பங்களை மோடி எப்படி சரி செய்யப்போகிறார்
மோடியால் இச்சோதனைகளை சாதனைகளாக மாற்றமுடியுமா?–மோடி கரை ஏறுவாரா>–முடியுமா மோடியால்?–

எல்லா கேள்விகளுக்கும் பதில் " மோடியால் முடியும்" என்பது மட்டுமே—அது –ஏன்? எப்படி?

இந்திய வரலாற்றில் 12 ஆண்டுகாலம் ஒருமாநிலத்தின் வெற்றிகரமான முதல்வராக பணியாற்றி.. பிரதமர் பதவியை ஏற்கப்போகும் முதல் மனிதர் நரேந்திர மோடி மட்டும் தான்..

இந்தியா பொன்றே…"பொருளாதார சீரழிவு, வெளியுறவில் சீர்கேடு–உள்நாட்டு பாதுகாப்பில் அச்சுறுத்தல்" என்ற மோசமான சூழலில் ஜப்பானின் பிரதமராக பதவி ஏற்றார் " சின்ஜி அபே"
தனது திறமையான நிர்வாகத்தால் ஜப்பானை தூக்கி நிறுத்திணார்..ஆனால் அவர் ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்தவர்–அதிகார மையத்தை அனுபவித்தவர்..

ஆனால் நரேந்திர மோடி ஒரு சாதரண குடும்பத்திலிருந்து வந்தவர்..டீ விற்ற்வர்..அதிகார மைய்யம் என்பதை புத்தகத்தில் மட்டுமே படித்தவர்.;;;

செய்வாரா—நரேந்திர மோடி செய்வாரா?—நாட்டை வளர்ச்சிப்பாதையில் ஏற்றுவாரா ?

செய்வார்..ஏனேனில் "அவர் "நிரூபிக்கப்பட்ட வெற்றியாளர்"

ஏற்கனவே ஆட்டத்தை துவங்கிவிட்டார்…சார்க் நாடுகளின் பிரதமர்கள் வருகை–இலங்கை  பாகிஸ்தனிலிருந்து இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை என —-"பவுண்டரிகள்" அடிக்க தொடங்கிவிட்டார்..

நிச்சயம் செய்து காட்டுவார்–அன்னை பாரத மாதாவை உலகின் குரு வாக ஆக்கி காட்டுவார்..நம்புவோம்–காத்திருப்போம்…

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...