பிரதமர் நரேந்திரமோடி, இரண்டு, மூன்று நிமிடங்களில், முடிவுகளை எடுக்கிறார். அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பது எல்லாம் கிடையாது. தன் முடிவால் எத்தனை பேர் பயனடைவர் என்பதிலேயே, அவர் அதிக அக்கறையை காட்டுகிறார்,” என, மத்திய சட்டமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார் .
இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது ;
சாதாரண குடும்பத்தை சேர்ந்த, நரேந்திரமோடி பிரதமரானது மற்றும் அவரின் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சிறப்பான செயல் பாடுகளை பார்த்து, உலகில் பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடுகளான, சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசிலும், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் வியப்படைந்துள்ளன. மோடி பிரதமரானபின், டில்லியில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்களில், புதியபணி கலாசாரம் துவங்கியுள்ளது.
காலை, 9:00 மணிக்கு அலுவலகம் வந்துவிடும் அவர், எப்போது வீடு திரும்புவார் என்பதை, யாரும்சொல்ல முடியாது. அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பது எல்லாம் கிடையாது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க, அவருக்கு இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மேலாவதில்லை. முடிவு எடுக்கும்போது, அதனால், எவ்வளவு மக்கள் பயன் அடைவர் என்பதை கருத்தில்கொண்டே எடுக்கிறார்.
கடந்த, மே, 26ம்தேதி, காலை, 9:00 மணிக்கு, பிரதமர் மோடியிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, குஜராத்பவனுக்கு வரும்படி கூறிய அவர், ‘மாலையில், நாமெல்லாம் அமைச்சர்களாக பதவியேற்க வேண்டும்’ என, தெரிவித்தார். அப்போதுதான், யாரெல்லாம், மத்திய அமைச்சர்கள் ஆகின்றனர் என்ற விவரமே, எனக்கு தெரிய வந்தது. முந்தைய காங்கிரஸ் அரசில் எல்லாம், அமைச்சர்கள் தேர்வில், ஆதரவாளர்கள் மற்றும் இடைத் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், இந்த அரசில், ஒவ்வொருவரின் தகுதி அடிப்படையில், அவர்களை, பிரதமர் மோடி அமைச்சராக நியமித்துள்ளார்.
நான் இப்போது, மத்திய அமைச்சராக இருப்பதால், ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்துவழங்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு குறித்து , தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லமாட்டேன். அரசு தான் இது பற்றி சொல்லும். இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.