ஈராக் போர்க்களத்தில் சிக்கித்தவித்த மேலும் 17 இந்தியர்கள் மீட்ப்பு

 ஈராக் போர்க்களத்தில் சிக்கித்தவித்த மேலும் 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தலைநகர் பாக்தாத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் அமைப்பான ஐஎஸ்ஐஎஸ். பல நகரங்களைக் கைப்பற்றிய கையோடு ஷரியத் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது. இந்நகரங்களில் நூற்றுக் கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

இவர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக ஈராக்குக்கு முன்னாள் தூதர் சுரேஷ்ரெட்டி, இந்தியாவின் சிறப்பு தூதுவராக அங்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் தடைசெய்யப்பட்ட சதாம் உசேனின் பாத்கட்சி தலைவர்கள் இருப்பதால் அவர்கள் மூலமாக தொடர்புகொண்டு இந்தியர்களை மீட்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அக்பருதீன் கூறியதாவது: போர்க் களத்தில் சிக்கிய மேலும் 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தலைநகர் பாக்தாத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். திக்ரீத் நகரில் சிக்கிய 46 இந்திய செவிலியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் . அவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

அத்துடன் தீவிரவாதிகளாள் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் நலமாக உள்ளனர் . மேலும் இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக நஜாப், கர் பாலா, பஸ்ராவில் 24 மணிநேர உதவி மையங்கள் அமைக்கப்படும். ஈராக்கில் இருந்து வெளியேறவிரும்பும் இந்தியர்கள் நாடுதிரும்ப விமான ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...