பாதுகாப்பு படைகள் நவீன மயத்துக்கு மோடி அரசு முன்னுரிமை அளிக்கும்; நிதி ஒதுக்கீடு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது; . ‘
தொடர்ந்து அருண்ஜெட்லியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கொள்முதல்களை விரைவு படுத்துகிற வகையில், பாதுகாப்பு படைகளுக்கான கொள்முதல் நடைமுறைகள் முழுமையாக மறு ஆய்வு செய்யப்படுமா?
பதில்:- முழுமையான மறு ஆய்வு என்ற வார்த்தைகளை நான் உபயோகிக்க மாட்டேன். ஆனால், தற்போதைய நடைமுறைகளின் படி கூட, நடைமுறைகளை விரைவு படுத்துவது என்பது சாத்தியமான ஒன்றுதான். ஒவ்வொரு பைலும் எண்ணற்றமுறைகள் மேலேயும், கீழேயும் சென்று கொண்டிருக்க வேண்டியதில்லை.
கேள்வி:- முந்தைய அரசில் பல்வேறு கொள்முதல்கள் இறுதிக் கட்டத்தில் இருந்தன. உதாரணத்துக்கு, விமானப்படைக்கான தாக்குதல் விமானங்கள் கொள்முதல் முந்தைய அரசால் திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப் படாமல் உள்ளதே?
பதில்:- முந்தைய அரசுக்கும், தற்போதைய அரசுக்கும் இடையே மோதல் போக்காக நான் இதை கருதமாட்டேன். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை. இதை நான் வலியுறுத்துவேன்.
பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு?
கேள்வி:- நீங்கள் ராணுவத் துறை, நிதித் துறை இரண்டுக்கும் மந்திரி. உங்களிடம் இருந்து பாதுகாப்பு படையினரின் நம்பிக்கை என்னவாக இருக்கிறது?
பதில்:- நீங்கள் அதற்கு ஜூலை 10ந் தேதிவரை (பட்ஜெட் தாக்கலாகும் தேதி) காத்திருக்க வேண்டும்.
கேள்வி:- பாதுகாப்பு துறைக்கு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?
பதில்:- சதவீத கணக்கிற்குள் நாம் செல்லவேண்டாமே. முழுமையான அளவை பார்ப்போம். பொருளாதாரத்தின் அடிப்படை விரிவாகிறது. குறைவான சதவீதம் கூட பெருந்தொகையாக வரும். எவ்வளவுதொகை தேவையோ, அவற்றை கிடைக்க பெருமுயற்சி செய்வோம்.
கேள்வி:- ஆயுதங்கள் பற்றாக் குறை குறித்து ராணுவ தலைமை தளபதியாக இருந்த விகே.சிங், முந்தைய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தாரே?
பதில்:- நாட்டின் பாதுகாப்புக்காக பாதுகாப்புபடைகள் தயார் நிலையில் உள்ளன. அவர்களது தேவை, அரசு கஜானாவிலிருந்து கவனிக்கப்படும்.
கேள்வி:- வி.கே.சிங்கிற்கும், புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிற தல்பீர்சிங் சுஹாக்கிற்கும் இடையேயான விவகாரம் குறித்து?
பதில்:- இதில் அரசின் நிலைப்பாடு, பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. (தல்பீர்சிங் சுஹாக் நியமனத்தில் அரசு உறுதி).
கேள்வி:- கடற்படை கப்பல்கள் விபத்துக்குள்ளானது பற்றி கடற்படை தளபதிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டதா?
பதில்:- இல்லை. இந்த விஷயத்தில் என்னிடம் கடற்படை முழுமையான தகவல்கள் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர்கள் உள்விசாரணை நடத்துகிறார்கள். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அவர்கள் எடுக்கின்றனர்.
கேள்வி:- ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ராணுவத்தை இந்தியா அனுப்புமா?
பதில்:- நான் யூகம் கூறமாட்டேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.