ஆந்திரா செல்லும் வழியில் பிரதமர் மோடி சென்னை வந்தார்

 ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதை பார்வையிட செல்லும்வழியில் பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர்க்கொத்து கொடுத்து பிரதமரை வரவேற்றனர்..

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 9.52 மணிக்கு 5 செயற்கை கோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி.-சி 23’ ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதைப் பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிடுகிறார்.

இதற்காக ஸ்ரீஹரிகோட்டா செல்லும்வழியில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். பிரதமர் பதவி ஏற்றபின்னர் முதல் முறையாக சென்னைவந்த நரேந்திர மோடியை, விமான நிலையத்தில் கவர்னர் கே.ரோசய்யா பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அவரைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து அளித்தும் அன்புடன் வரவேற்றார்.

தொடர்ந்து மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் மலர்க்கொத்து கொடுத்து பிரதமரை வரவேற்றனர்.

மேலும், தமிழக பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், துணைத்தலைவர் எச்.ராஜா, முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்களான மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ, பாமக. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்பு மணி ராமதாஸ் எம்.பி., பா.ம.க. தலைவர் கோ.க.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி, ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சென்னையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டா போய்ச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டரில் காலை 11 மணிக்கு சென்னை வருகிறார். சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் 11.15 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...