டெல்லியில் உள்ள செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சக அலுவலகத்துக்கு தாமதமாக வேலைக்குவந்த 40 ஊழியர்களை, சாதாரண விடுப்பில் வீட்டுக்கு திரும்பிபோகுமாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் நேற்று காலை 9 மணிக்கு டெல்லியில் உள்ள தனது அமைச்சக அலுவலகத்துக்கு திடீரெனவந்துள்ளார். 9.30 மணிக்கு அமைச்சகத்தை ஜாவேத்கர் சுற்றி பார்த்தபோது பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிக்குவரவில்லை. சில செக்ஷன்கள் வெறிச்சோடி கிடந்தன.
இந்நிலையில், காலை 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர்கள் 10 மணிக்கு அலுவலகம்வந்தனர். ஒருசிலர் அப்போதும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் தாமதமாகவருபவர்கள் அனைவரையும் தன்னை வந்து பார்க்குமாறு உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தாமதமாக பணிக்குவந்த 40 பேர், அமைச்சரை பார்ப்பதற்காக அவரது அறைக்குவெளியே வரிசையாக நின்றனர். அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து சாதாரணவிடுப்பில் வீட்டுக்கு செல்லுமாறு ஜாவேத்கர் உத்தரவிட்டார்.
இனிமேலும் தாமதமாக வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்து அனுப்பினார். இதைத் தொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும் ஒருசுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு அலுவலகம் வரவேண்டும். 5.30 மணிவரை இருக்கையில் அமர்ந்து பணிசெய்ய வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட பிரிவு கண்காணிப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஒரேநேரத்தில் 40 பணியாளர்களை விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.