நாட்டின் பொருளாதாரம் விரைவில் நிலைப்படும், நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் எச். ராஜா கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது;
பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளம்வயதில் தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைத்துக் கொண்ட அமித்ஷா, குஜராத்தில் மோடி அரசுக்கு உறுதுணையாக இருந்தவர்.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 5 புதிய ரயிவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்மிக சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் ராமேசுவரம்-ஹரிதுவார், மேல்மருவத்தூர்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிவிப்புகளை வரவேற்கிறோம்.
மக்களவைத் தேர்தலின்போது பாஜகவை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாகூட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வேயின் உண்மை நிலை தெரிவிக்கப்பட்டுள்ளது என பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சென்னை மெளலிவாக்கம் கட்டடவிபத்து குறித்து தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டும் வகையில் இருந்தாலும், அது போன்ற அடுக்குமாடி கட்டடங்களை கட்டுவதற்கு அனுமதியளித்த அதிகாரிகள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2003-04-இல் 8.8 சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிர்வாகத் திறமின்மையால் 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல அன்னிய செலாவணியும் வெகுவாக குறைந்துள்ளது.
எனினும், ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக மத்தியஅரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இது போல இந்தியாவின் பொருளதாரமும் விரைவில் நிலைப்படும் . அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார்
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.