வளர்ச்சிதான் எங்களின் இலக்கு, நிதி பற்றாக்குறையை 4.1 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம் , இது முடிவல்ல.பயணத்தின் ஆரம்பம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார் .
மத்திய பொதுபட்ஜெட் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது;
வருமானத்தை அதிகரிக்க செய்வதுடன் செலவையும் குறைக்க திட்டமிட்டுள்ளோம்; எனது இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு புதுபாதையை ஏற்படுத்தித் தரும் என நம்புகிறேன் நான் வகுக்கப்பட்ட திட்டங்களின்படி நடக்க நினைக்கிறேன்; மற்றவர்கள் டிவி.,க்களில் பேட்டிகொடுக்க மட்டுமே நினைக்கிறார்கள்; ஆனால் நாங்கள் செயல்பட நினைக்கிறோம்; இது எனக்கும், அவர்களுக்கும் இடையேயான வித்தியாசம்.
நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இல்லாததால் அதனால் ஏற்படும் பிரச்னைகளை சந்தித்துவருகிறோம்; பொருளாதாரத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால் அவர்கள் இந்தியாவில் முதலீடுசெய்ய தயாராக இல்லை; இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகின்றனர்; இதனால் மக்களின் வரித்திட்டம் மோசமாக உள்ளது; உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து, விலைவாசி உயர்ந்துள்ளது; மக்களின் வரிப் பணத்தால் கிடைக்கும் தொகையை கொண்டு பொருளாதாரத்தை சீராக்கமுடியாது; இதனை சரி செய்வதற்காகவே 45 நாட்களாக மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தபட்ஜெட்டை தயாரித்துள்ளேன்.
இது எனதுபயணத்தின் ஆரம்பம்தான்; இந்த பயணத்தை துவங்குவதற்கு முன்னரே 7 முதல் 8 மிகப் பெரிய விஷயங்களில் என்னை நான் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளேன்; முந்தைய அரசு செய்யாமல் விட்டுச் சென்ற நலத்திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறேன்; அவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நினைக்காமல், எளிமையாக அதனை சமாளிக்க நினைத்து காலம் ஓட்டியதால்தான் பல விவகாரங்கள் சிக்கல் நிறைந்ததாக ஆகி உள்ளது; லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கட்சியாக வெற்றிபெற்றதும் உலக முதலீட்டாளர்கள் 2வது முறையாக நமக்கு வாய்ந்த கொடுத்திருப்பது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது; நான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கடைபிடித்தால், இந்தியபொருளாதாரம் புதிய பாதையில் செல்ல வழிவகுக்கும்; அரசுக்கு ஒத்துழைப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டியது மக்கள்தான்; வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் சுமையை குறைப்பதற்கே புதிய வரி ஏதும் விதிக்கவில்லை.
காங்கிரசின் திட்டங்களை நான் காப்பி அடிக்கவில்லை; இது முற்றிலும் வேறுபட்டது; தனியார் துறை முதலீடுகள் குறித்த அறிப்பபை நான் வெளியிட்டதும் சென்செக்சில் உயர்வு ஏற்பட்டது; 2018ம் ஆண்டுக்குள் மிகப் பெரிய நிதித்துறை மாற்றத்தை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்; வங்கிகளின் கிளைகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்; இதில் அரசின் பங்களிப்பு 80 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைத்துள்ளோம்.
* செலவுகளைக் குறைக்க நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? செலவை கட்டுப்படுத்தும் திட்டங்கள் எதையும் வெளியிடாமல் நீங்கள் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதிலேயே கவனம் செலுத்தி விட்டு செலவை கண்காணிக்க ஆணையம் அமைத்துள்ளது எவ்வாறு?
எதார்த்தத்தை உணர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது; கடந்த 66-67 ஆண்டுகளில் மானியம் குறித்த கேள்விகளுக்கு இந்தியாவில் விடை காண முடியவில்லை; அப்படி இருக்கையில் 45 நாட்களில் என்னால் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்; மானியம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கண்காணிக்கவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; மானியங்களால் ஏற்படும் செலவு அதிகரித்துள்ளது; இதனை கருத்தில் கொண்டே எண்ணெய், டீசல் ஆகியவற்றை சந்தை மயமாக்க திட்டமிட்டுள்ளோம்.
* சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணை விலை பற்றி…
ஆதார் திட்டத்தின் கீழ் இவற்றை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம்; பிரதமர் கடந்த வாரம் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்திலும் இது பற்றி விவாதிக்கப்பட்டது.
* 2015 ஏப்ரல் மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி மாற்றி அமைக்கப்படுமா?
அதற்கு முக்கியத்துவம் அளித்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
* இது சீரமைப்பிற்கான உங்கள் பயணத்தின் ஆரம்பம் என தெரிவித்துள்ளீர்கள். அப்படியானால் உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை அடுத்த 6 அல்லது 8 மாதங்களில் ஏற்படுத்துவீர்களா?
அது குறித்து நானும், பிரதமரும் ஆலோசித்து வருகிறோம்; வளர்ச்சிக்கான பாதையில் நீங்கள் நடந்தால் பாதை தெளிவாக உள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.