அமித் ஷா மோடி அலையை பேரலையாக மாற்றிக் காட்டியவர்

 அமித் ஷா உ.பி.,யில் மாபெரும் வெற்றியை தந்து, மத்தியில் பாஜக தனித்து ஆட்சியமைத்து சாதனை புரிந்திட வழித்தடம் அமைத்து கொடுத்த அரசியல் சாணக்கியன் என்றால் அது மிகையாகது.

அதற்க்கு பரிசாக பாஜக.,வின் தேசியத் தலைவராக பாஜக நாடாளுமன்றக் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரிய தொழில்குடும்பத்திலிருந்து வந்தவர்தான் இந்த அமித் ஷா. இவரும் ஒரு தொழிலதிபர் தான். இருப்பினும் தேசத்தின் மீதான அதீத பற்றின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கங்களில் அதிக ஈடுபாடு காட்டினார். பின்னர் பா.ஜ.க-வில் சேர்ந்தார் . 1985-ம் ஆண்டில் பா.ஜ.க-வில் நரேந்திர மோடி களமிறங்கிய பிறகு அவருக்குக் கீழ் இளைஞரணிப் பிரிவில் பணியாற்றினார் . அவரது சிறப்பான செயல்பாட்டின் காரணமாக 1991-ம் ஆண்டில் தொடங்கி குஜராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காகத் தேர்தல் பொறுப்பாளராக பலமுறை நியமிக்கப்பட்டார் .

2002-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றவுடன் அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு இடம் கிடைத்தது. அதாவது அமைச்சரவையில் இளையவரான அமித் ஷாவுக்கு உள்துறை உள்பட 10 துறைகள் வழங்கப்பட்டன, இது அவரது திறமையை பறைசாற்றிய மற்றொரு அங்கீகாரமாகும் 2007-ம் ஆண்டில் மீண்டும் நரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற போதும் அமைச்சரவையில் அமித் ஷா தொடர்ந்தார்.

இந்நிலையில் தான் காங்கிரஸ்ஸின் பலிவாங்கும் படலத்தின் ஒரு அங்கமாக அமித் ஷாவும் குறிவைக்கப்பட்டார் சோரப்தீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கை போலி என்கவுன்ட்டர் வழக்காக திசைதிருப்பும் படலங்களும் தொடர்ந்தன. இதன் ஒரு பகுதியாகவே கடந்த ஆண்டு குஜராத்தை விட்டு வெளியேறுமாறு அமித் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 சூரியனை கையால் மறைத்துவிட முடியுமா?. மறைக்க முடியும் என்ற காங்கிரசின் முட்டாள் தனமான முயற்ச்சி அவர்களைத்தான் அஷ்த்தமணம் அடையச்செய்தது. அமித் ஷாவை குஜராத்தை விட்டு வெளியேற்றி மோடியை முடக்க முயன்றது காங்கிரஸ். மோடியோ அமித்ஷாவை உ.பி.,யின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமித்து காங்கிரஷை மட்டும் அல்ல சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என்று அனைத்து கட்சிகளின் சாம்ராஜ்யத்தையும் முடக்கிவிட்டார். உ.பி.,யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் பாஜக கூட்டணியை வெற்றியடைய செய்தவர் அமித்ஷா , இதில் பாஜக மட்டும் தனித்து 71 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது , கூட்டணி கட்சியான அப்னா தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றது.

உ.பி.,யில் மட்டும் அல்ல அதன் அருகில் உள்ள பீகாரிலும் அமித் ஷாவின் பகீரத முயற்சியால்தான் காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தியும், உபேந்தர் குஸ்வஹாவின் (Upender Kushwaha) கட்சியும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 31 தொகுதிகளில் அபார வெற்றியும் பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தனித்து 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆக மொத்தத்தில் மோடி அலையை பேரலையாக மாற்றிக் காட்டியவரே இந்த அமித் ஷா. வரவிருக்கும் மகாராஷ்டிரா , ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், டெல்லி , ஹரியான மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பேரலையாக மாற்றிக்காட்ட போறவரும் இந்த அமித் ஷா தான் .

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...