தர்மத்தின் காவலராக விளங்கியவர் ஆடிட்டர் ரமேஷ்

 சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளையொட்டி, அவர் கொலையுண்ட இடத்தில் பாஜக நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர். பாஜக மாநில பொதுசெயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி சேலத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது முதலாமாண்டு

நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. படுகொலை சம்பவம் நடந்த மரவனேரியில் ரமேஷின் உருவ படத்திற்கு முன்னாள் பாஜ மாநில தலைவர் லட்சுமணன் தலைமையில் பாஜவினர் மலரஞ்சலி செலுத்தினர்.

 அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் மிகப்பெரிய உருவப்படம் வைக்கப்பட்டு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

மாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆடிட்டர் ரமேஷின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் அப்சரா இறக்கம் பகுதியில் உள்ள யானை மண்டபத்தில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணியளவில் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் உள்ள சந்திர மஹால் திருமண மண்டபத்தில் ஆடிட்டர் ரமேஷின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது .

இதில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷூக்கு மலரஞ்சலி செலுத்தி  பேசியதாவது:

தர்மத்தின் காவலராக விளங்கிய ஆடிட்டர் ரமேஷ், தனது வாழ்நாளில் எந்த அச்சுறுத்தலையும் கண்டு பயப்படாதவர். அவர் பயந்து வாழ்ந்திருந்தால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் இதுபோன்ற தாக்குதல்களால் ஏராளமான சகோதரர்களை இழந்துள்ளோம். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

இருப்பினும் அவர்களின் தாக்குதலைக் கண்டு நாம் பயந்து கொள்ளவோ, ஒழிந்து கொள்ளவோ கூடாது. மத்தியில் நரேந்திர மோடியின் ஆட்சி அமைந்ததால் மட்டுமே பயங்கரவாதிகள் முடங்கிவிடுவார்கள் என்று நாம் எண்ண முடியாது. அவர்கள் இருக்கும் வரையிலும் பயங்கரவாதம் இருந்து கொண்டே இருக்கும்.அவர்களை அழிக்கும் வரையிலும் தேச பக்தர்கள் ஒதுங்கிப்போகவோ, ஓயவோ மாட்டார்கள். தர்மத்தைக் காக்கும் கடமைப் போரில் நாம் உடனடியாக களம் இறங்க வேண்டும்.கடந்த 1984-ல் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றது. ஆனால் அவர் அதை தைரியத்துடன் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் உக்ரைன் நாட்டில் மலேசிய விமானம் தாக்கப்பட்டதில் 298 பேர் பலியாகி உள்ளனர். அந்த விமானத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் செல்ல இருந்தது. இதனால் அந்தத் தாக்குதல் யாரைக் குறிவைத்து நடத்தப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து பாதுகாத்துக் கொண்டிருப்பதைப் போன்று, நாட்டுக்குள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாதுகாத்து வருகின்றனர்.தேச பக்தர்களைத் தாக்கியவர்கள் கணக்கிட முடியாத அளவுக்கு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதைப் போலவே தேசத்தைக் காப்பவர்களாகிய நாங்களும் கணக்கிட முடியாத அளவுக்கு இருக்கிறோம். இருப்பினும் நாங்கள் அவர்களை திருப்பித் தாக்கவோ, அழிவுப் பணிகளில் ஈடுபடவோமாட்டோம். மாறாக ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே ஈடுபடுவோம்.

கடந்த ஆண்டு ரமேஷ் இறந்த நாளில், இதுபோன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்கு நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சூளுரைத்தோம். அதேபோல் நாம் மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிட்டோம். ஆனால் அதைப் பார்க்க ரமேஷ் உயிருடன் இல்லை.மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததால் மட்டுமே பயங்கரவாதத்தை நாம் தடுத்து விடுவோம் என்று எண்ண முடியாது. பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க மாநிலத்திலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும். வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...