மோடி அரசின் செயல்பாடுகள் திருப்தி தருகிறது; கருத்து கணிப்பு

 நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக பெரும்பாலானவர்கள் ஆன்லைனில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த மே மாதம் பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . பாராளுமன்றத்தில் மோடி அரசின் முதலாவது ரெயில்வே பட்ஜெட்டும், பொதுபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த 3 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி பா.ஜ.க பொதுமக்கள் பிரசார கொள்கை நிபுணரும், பா.ஜனதா பிரமுகருமான ராஜேந்திர பிரதாப்குப்தா என்பவர் ‘ஆன்–லைன்’ மூலம் கருத்து கணிப்பு நடத்தினார்.

தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர், முதலீட்டாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், கட்டிட காண்டிராக்டர்கள், கட்டுமான தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

பா.ஜனதாவின் தகவல் தொடர்புபிரிவு ஒத்துழைப்புடன் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேரிடம் ஆன்– லைனிலேயே கருத்து கேட்கப் பட்டது. அதில், பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளனவா?, மோடி அரசின் செயல்பாடுகள் எப்படி என்பது குறித்தும் , பல்வேறு திட்டங்கள் பற்றியும் கருத்து கேட்கப்பட்டது.

அதில் 10 ஆண்டுகள் நடந்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட 60 நாள் பா.ஜனதா அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பெரும் பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 50 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர்.

30 சதவீதம்பேர் தங்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் 20 சதவீதம்பேர் எதிர்ப் பார்ப்புகளையும் தாண்டி மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது. 10 ஆண்டுகள் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை முந்தி விட்டது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

42 சதவீதம் பேர் ஊழலை எதிர்த்து கடுமையாக போராடவேண்டும் என்றும், 24 சதவீதம் பேர் பணவீக்கம் மற்றும் விலை வாசிக்கு எதிராகவும், 26 சதவீதம்பேர் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருப்பதாகவும் ராஜேந்திர பிரதாப் மேலும் கூறினார்.

மோடியின் கங்கைநதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு வாரணாசி தொகுதியில் 75 சதவீதம் பேர் ஆதரவும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

25 சதவீதம்பேர் புனித நகரான வாரணாசியில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர வாரணாசி தொகுதியில் மட்டும் 31 ஆயிரம்பேர் கருத்து கணிப்பில் பங்கேற்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...