ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமரை அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபே சந்தித்துப் பேசினார்.அப்போது இந்திய நகரங் களை 'ஸ்மார்ட்' நகரங்களாக மாற்றுவது குறித்து இரண்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முதல் கட்டமாக வாரணாசியை கலாச்சார நகரமாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஐந்து நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றார். கன்சாய்விமான நிலையத்தில் தரையிறங்கிய அவருக்கு அந்த நாட்டு அரசு சார்பில் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெளிநாட்டுத் தலைவர்களை டோக்கியோவில் சந்திப்பது தான் வழக்கம். பிரதமர் மோடிக்காக அவர் டோக்கியோவில் இருந்து 500 கிமீ. தொலைவில் உள்ள கியோட்டோவுக்கு வந்தார்.
அங்கு நகரமேயரின் வீட்டில் மோடியும் ஷின்சோ அபேவும் சந்தித்துப்பேசினர். மரபுகளை மீறி இந்தியப்பிரதமர் மோடியை ஷின்சோ அபே சந்தித்து பேசியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
கியோட்டோவை போன்று உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியையும் கலாச்சார அம்சம் ஏதும் மாறாமல் ஸ்மார்ட் நகரமாக மாற்ற இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கியோட்டோ மேயர் டைசாகு கடோகாவாவும் ஜப்பானுக்கான இந்தியத்தூதர் தீபா வாத்வாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் மோடிக்கு ஷின்சோ அபே சிறப்பு விருந்து அளித்தார்.
அப்போது சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள், பகவத் கீதை ஆகியவற்றை ஷின்சோ அபேவுக்கு மோடி பரிசாக வழங்கினார்.
கியோட்டோ நகரில் ஞாயிற்றுக் கிழமையும் தங்கியிருந்த மோடி அங்குள்ள பல்வேறு புராதன இடங்கள், கோயில்களைப் பார்வையிட்டார் .
எட்டாம் நூற்றா ண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயுடன் சுமார் அரைமணி நேரம் சுற்றிப்பார்த்த மோடிக்கு, அந்த ஆலயத்தின் புராதாண சிறப்புகளை பற்றி ஆலயத்தின் தலைமை பிக்ஷு விளக்கிக்கூறினார்.
யுனெஸ் கோவின் புராதாண சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த டோஜி ஆலயம் 5 அடுக்குகளுடன் முழுக்க மரத்தினால் உருவாக்கப்பட்டது. ஜப்பானிலேயே மிக உயரமான 57 மீட்டர் உயர பக்கோடாவை கொண்டது( கூம்புவடிவ கோபுரம்) என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இந்த டோஜி ஆலயத்துக்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியும், இந்த ஆலயத் துக்கு பெருமையும் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்று ஆலயத்தின் தலைமை பிக்ஷு யாசு நாகாமோரி (83) தெரிவித்தார்.
அப்போது, அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட பிரதமர், 'நான் மோடி- நீங்கள் மோரி..?' என்று வேடிக்கையாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, அவரது நகைச்சுவை யுணர்வை ரசித்த ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட உடனிருந்த அனைவரும் தம்மை மறந்து சிரித்து மகிழ்ந்தனர்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.