பாஜக.,வில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப் படவில்லை

 பாஜக.,வில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப் படவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு கூறினார்.

கோவையில் நிருபர்களிடம் அவர் ஞாயிற்றுக் கிழமை கூறியது:

பாஜக ஆட்சிமன்ற குழுவில் இருந்த மூத்த தலைவர்கள் வாஜ்பாய், எல்கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் மாற்றப்பட்டு புதியநிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்தமாற்றம் அவர்களை புறக்கணிப்பதாகாது .

இளம் தலைமுறைக்கு வாய்ப்புக்கொடுக்கும் வகையிலே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை அடுத்த தலை முறையினருக்கான வாய்ப்பு என்றே பார்க்கவேண்டும்.

நான், பிரதமர் மோடி உள்ளிட்டவர்களை வாஜ்பாய், அத்வானி ஆகிய மூத்த தலைவர்களே அடையாளம் கண்டு ஊக்குவித்தார்கள். நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மத்திய அரசு தீர்மானிப் பதில்லை. அது, மக்களவை தலைவர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தவிவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் தற்போது எந்தக்கருத்தும் சொல்ல முடியாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு தாற்காலிகமானது தான். விலைவாசி உயர்வுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் காரணம். பாஜக ஆட்சிக்குவந்து 3 மாதங்களே ஆன நிலையில், விலைவாசி உயர்வுக்கு பொறுப்பேற்க முடியாது .

கல்வி, சுகாதாரம் என்பது சமூகத்தின் இருகண்களைக் போன்றது. சமூகம் வளரவேண்டுமானால் முழுமையான கல்வி அறிவுபெற்றிருக்க வேண்டும். நாட்டில் 40 சதவீதம் மக்கள் இன்றளவும் எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருக்கின்றனர். இனியும் இந்நிலை தொடரக்கூடாது. மக்களிடம் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு சரியான தருணம் இது தான். அதற்கேற்ப பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கல்வி, சுகாதாரத்தை பொறுத்த வரை அரசின் பங்களிப்பு மட்டும் முழுபலனை கொடுத்துவிடாது. தனியார் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே வளர்ச்சியை எட்டமுடியும். எல்லாவற்றையும் அரசு செய்துகொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் அப்படியே இருந்துவிட கூடாது. நாமும் நமது கடமைகளில் இருந்து தவறக்கூடாது. சமுதாய பங்களிப்பை அளிக்கவேண்டும். அறிவுத் திறன் மிக்கவர்களின் பங்களிப்பு இப்போது நாட்டிற்கு அவசியமாக இருக்கிறது. நாட்டின் சுகாதாரத்திற்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இயந்திர மயமாக்கல் மூலம் உடல் உழைப்பு குறைந்துவிட்டதால் நோய் தாக்கி வருகிறது. ஒவ்வொருவரும் சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவேண்டியது அவசியம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...