நூறு நாட்கள் என்ன, ஊடகங்கள் எனக்கு நூறு மணி நேரம் கூட தரவில்லை" பதவியேற்ற இரு நாட்களில் நரேந்திர மோதி சொன்னது இது. பதவியேற்று அவர் நாற்காலியில் அமர்ந்த கணத்திலேயே, "மோதி தேர்தல் பிரசாரங்களில் சொன்ன அந்த 'நல்ல காலம்' (அச்சே தின்) எங்கே?" என்று ஒத்த குரலில் கூவத்தொடங்கி விட்டனர், அறிவுஜீவிகள், ஊடக, அரசியல் துறைகளில்
ஊடுருவியிருக்கும் மோதி எதிர்ப்பு கூட்டத்தினர். இப்படியிருக்கும்போது, 100 நாட்கள் செயல்பாட்டிற்கு எந்த அளவு அவர்களை வசீகரித்திருக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் வேறுபட்ட விளைவுகளே வந்தன.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதன்முறையாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யில் 5.7% வளர்ச்சியை நரேந்திரமோதி அரசு நாட்டுக்கு அளித்தது. முந்தைய அரசு தேக்கத்திற்கு சர்வதேச நிலவரங்களை சால்ஜாப்புகளாக சொல்லித்திரிந்தது. தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பிரசுரங்கள் தேஜகூ அரசே இந்த வளர்ச்சிக்கு முழுக்காரணம் என்று புகழும் நிலைக்கு தள்ளப்பட்டன. 3.5% வளர்ச்சியுடன் உற்பத்தித்துறை மீள்வதற்க்கான அறிகுறி தெரிகிறது. மின் உற்பத்தி மற்றும் உற்பத்தி சாதனங்கள் கூட 10.2% உயர்ந்துள்ளது. குறைந்த பருவமழை, எல் நினாவின் வானிலை தாக்கம் போன்றவற்றையும் மீறி விவசாயம் 3.8% வளர்ச்சி கண்டுள்ளது. செய்தி தொலைக்காட்சிகளின் அறிக்கைக்கு மாறாக உணவுப்பொருட்களின் விலை – தானியம், உருளை, வெங்காயம் உள்ளடக்கி – குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
வடமாநிலங்களில் மின்சாரத்தின் கையிருப்பு 2,3 நாட்களுக்குதான் உள்ளது என்று சில நாட்களுக்குமுன், செய்தி தொலைக்காட்சிகள் உலகமே அழிவதுபோல் கூவியது நினைவிருக்கிறதா? அங்கு நிலைமை மாறியுள்ளதை இவை இருட்டடிப்பு செய்து விட்டன.
முந்தைய அரசில் நகைப்புக்குரியதாக இருந்த இந்தியாவின் சர்வதேச நிலைப்பாடு இப்போது மாறிவிட்டது. சார்க் தலைவர்களை தன் பதவியேற்பு விழாவிற்கு வரவழைத்ததிலிருந்தே அவர் தன் அண்டை நாடுகளை எப்படி அணுகுகிறார் என்பது தெளிவானதுடன் சர்வதேச விவகாரத்தில் இந்த வியூகமும் ஒரு மைல் கல் ஆகும். உலக அரங்கில் பிரம்மாண்ட பிரவேசம் செய்வதில் அவருக்கு ஆர்வமில்லை. உலகின் சிறிய நாடுகளில் ஒன்றாகிய, அதே சமயம் இந்திய – சீன வியூகத்தில் முக்கிய இடம் வகிக்கும் பூடானிலிருந்து தொடங்கியதிலேயே புரிந்து கொள்ளலாம். பின்னர் கடந்த 10-15 ஆண்டுகளில் முழு விரோத நிலைக்கு போய்விட்ட நேபாளத்திற்கு விஜயம் செய்தார். மோதியின் விரலசைவில் நேபாள அரசின் உதவியுடன் பீஹாரின் வெள்ளம் சரியான நேரத்தில் கட்டுக்குள் வந்தது. பலப்ரயோகம் செய்யும் சீனாவின் கைக்குள் முழுவதும் சிக்கிக்கொண்ட அந்த நாடு தற்போது இனிய பாரம்பரிய உறவு மிக்க அண்டை நாடான நம்மிடம் திரும்பியுள்ளது.
மிகவும் கீழ்ப்படியாத, அழிவு மனப்பான்மை கொண்ட பாகிஸ்தானுக்கு கூட, (அதன் தூதுவர்கள் பிரிவினைவாத தலைவர்களுடனான பேச்சுக்குப்பின்) இருதரப்பு பேச்சு வார்த்தையை ரத்து சேதத்தின் மூலம், அதன் இடம் புரிய வைக்கப்பட்டது. பிறகு பிரேசிலில் பிரதமர் நரேந்திர மோதி, ஒரு குறிப்பிட்ட நோக்கமான வளர்ச்சி வங்கி உருவாக்கும் பொருட்டு தலைவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, வங்கி உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்ததன் மூலம், தன் தனித்துவத்தை நிரூபித்தார். இதற்கெல்லாம் ஊடக வெளிச்சம் விழவில்லை. ஆங்கில செய்தி சானல்களில் இதைப்பற்றி விவாதிக்கக்காணோம். மாறாக, பாலியல் கொடுமை குறித்த, குறிப்பிட்ட அரசியல்வாதி நாட்டின் ஏதோ மூலையில் பேசிய பேச்சைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தன. பிரதமருடன் தாங்களும் அழைத்து செல்லப்படவில்லை என்பதே இந்த ஊடகத்தினரின் வாதம். 24 மணி நேரமும் முழுவதும் தேவையற்ற பிரச்னைகளை ஒளிபரப்பியதன் மூலம் இந்த சொத்தை வாதம் காற்றோடு போய்விட்டதுதான் மிச்சம்.
நாட்டின் தூய்மை நரேந்திரமோதியின் முக்கிய ஆர்வங்களில் ஒன்று. இதை 'ப்ராஜக்ட் டைகருடன்' ஒப்பிடலாம். உணவுச் சங்கிலியை பேண புலிகள் அழியாமலிருப்பது அவசியம். அதேபோல், நாட்டை முன்னேற்றப்பாதையில் பெருமையுடன் கொண்டு செல்ல தூய்மையான தேசமும் அத்தியாவசியம் .
கடந்த 100 நாட்களில் நரேந்திர மோதி அரசு செயல்பட்டதில் அடிப்படை அம்சங்களில் சில இவை. இன்றும் செய்தி ஊடகளுக்கு, உண்மையான முன்னேற்ற திட்டங்களை புரிந்துகொண்டு செய்தி வெளியிட தெரியவில்லை. ஜனரஞ்சக, சமூக திட்டங்களை மக்கள்முன் காட்டும் பழைய அரசின் பாணியில் செய்தி வெளியிட்டு, பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரசும் அதன் மூடர் படையும் "நல்ல காலம்" (அச்சே தின்)எங்கே? என்று கேட்கும்போது, நம் பத்திரிக்கையாளர்கள் உண்மையான பத்திரிக்கையாளர்களாக இருந்தால், "உங்கள் காங்கிரஸ் காலத்தில் ஏழை மக்களுக்கு எந்த நல்ல காலத்தை காட்டினீர்கள்" என்று திருப்பி கேட்கவேண்டியதுதானே? இந்திரா காந்தி மக்களை 'அரை ரொட்டி சாப்பிட்டு, காங்கிரசுக்கு வாக்களியுங்கள்' என்று வற்புறுத்தினார். முப்பதாண்டுகளுக்குப்பின் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேரனோ மக்களை 'ஒரேயொரு ரொட்டி சாப்பிட்டு காங்கிரசுக்கு வாக்களியுங்கள்' என்று வற்புறுத்துகிறார். அரை ரொட்டியிலிருந்து ஒரு ரொட்டிக்குதான் முன்னேறியுள்ளோம் என்று வெளிப்படையாக கூறிக்கொள்ள அவர்களுக்கு வெட்கமே இல்லை. காசியை கியோட்டோவாக மாற்ற முனையும் நரேந்திரமோதியின் எண்ணத்தை குறை கூறும் மடத்துணிச்சல் மட்டும் உண்டு.
நரேந்திரமோதியின் 100 நாட்கள் அரசை நம் நாட்டின் பத்திரிக்கையியல் எப்படி ஆய்கிறது என்பதற்கு இவையே நல்ல உதாரணம் – அவர்கள் காங்கிரஸின் பார்வையில் அணுகுவதை விட்டு நாட்டின் பார்வையில் அணுகவேண்டும்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.