இரண்டு பொருள்கள் ஸ்தூலம் ‘சூட்சமம்

 சிலவற்றுக்கு பதிலளிக்க யாராலும் இயலாது!! இருந்தாலும் பகுத்தறிவு அடிப்படியில் இது போன்ற சந்தேகங்கள் தோன்றும் சில நண்பர்களுக்காக இப்பதிவைத் தருகிறேன்!! இப்பதிவின் பொருள் என்னுடைய இன்னொரு பதிவுத் தொடரான ”ஹிந்து தர்ம சிந்தனைகள் ” என்னும் தொடருக்கும் மிகவும் பொருந்தும்!!

என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் உலகில் உள்ள மதங்களில் ஹிந்து மதம் ஒன்றில் மட்டும்தான் எந்தப் பொருளுமே இரண்டு அர்த்தங்கள் வரும் முறையில் சொல்லப்பட்டுள்ளது!! ஹிந்து மதத்தின் பல உள்ளார்ந்த வேதப் பொருட்கள், உபநிஷதங்கள், சாஸ்திரங்கள், தத்துவங்கள் இவை எல்லாமே இருவிதமான பொருளைக் காணும் முறையில்தான் அமைந்து உள்ளன!!

அது ”ஸ்தூலம்” மற்றும் ”சூட்சமம்” என்று சொல்லப்படுகின்றன!! ஸ்தூலம் என்பது ஒரு விஷயத்தைப் படிக்கும்போது நமக்கு நேரிடையாகப் புலப்படும் பொருள்!! இதைக் கிட்டத்தட்ட நாம் பாடப் புத்தகங்களைப் படிக்கும்போது நமக்கு அறிவால் விளங்கும் பொருள் என்று கொள்ளலாம்!! சூட்சமம் என்பது மறைந்து நிற்கும் பொருள்!! அந்தப் பொருள் தியான நிலையில் ஆழ்ந்த சிந்தனையின்பால் புலப்படும் பொருளாக இருக்கும்!! தியானம் என்பது கூட அல்ல!! நாம் ஒரு ஈடுபாட்டுடன் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப மனதை ஒருமுகப் படுத்தி சிந்திக்கும் போது தோன்றும் பொருள் எனலாம்!! நமது மதத்தின் பெரும்பாலான விஷயங்கள் இந்த இருமுறைகளிலுமே சொல்லப்பட்டுள்ளன!! ஆனால் இறைவன் பற்றிய ஞானத்தை அறிய சூட்சம சிந்தனையின்றி இயலாது!! அவ்வாறான சூட்சம சிந்தனையைப் பெறத்தான் ஞானிகள் தனிமையில் தவம் இருக்கின்றனர்!! இரு உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன்!!

வீட்டு வாசலில் சாணம் தெளித்தால் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று கூறப்பட்டுள்ளது!! இது ஆன்மீக அளவில் ஒரு நம்பிக்கை என்று கொண்டால் அது ஸ்தூலப் பொருள்!! கொஞ்சம் சிந்தித்தால் சாணம் தெளிப்பது அறிவியல் ரீதியான செயல், சாணம் ஒரு சிறந்த கிருமிநாசினி அதனால் அந்த வீட்டில் நோய்நொடிகள் இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்பது சூட்சமப் பொருள் எனலாம்!!

இன்னமும் ‘ஏ மனிதனே உன்னை விட மிக பிரம்மாண்டமானதும், காலக் கணக்கற்றதும், அளப்பரிய சக்தி கொண்டதுமாக நீ வாழக் கூடிய பிரபஞ்சம்தான் கடவுள்’ என்று வெளிப்படையாக சொன்னால் அது ஸ்தூல நிலை!!! ஆனால் அவ்வாறு சொன்னால் அது மனிதனுக்கு நீதி, தர்மம் போன்ற நிலைகளில் நம்பிக்கை ஏற்படுத்தாது என்பதால் அந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு சக்திக்கும் தனித்தனியாகக் கடவுளர் பெயரை வைத்து அவர்களை வணங்க வேண்டும் என்று சொல்லுதல் சூட்சம நிலை எனலாம்!!! சூட்சம நிலையில் கடவுளரைப் பற்றிச் சிந்திக்கும் ஒருவனுக்கு அதன் உட்பொருள் விளங்கும்!!

இதையெல்லாம் சொல்ல நீ என்ன பெரிய அறிவாளியா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்லுவேன்!! ஏனென்றால் ஹிந்து மத சாத்திரங்களைப் படித்துப் பகுக்கும் அளவுக்கு எனக்கு ஞானமும் இல்லை சமஸ்கிருதமும் தெரியாது!! இருப்பினும் நான் அறிந்த சில விஷயங்களை இங்கு உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் அவ்வளவே!!!

One response to “இரண்டு பொருள்கள் ஸ்தூலம் ‘சூட்சமம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள் – மோகன் பகவத் ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முற ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு பட்டியல் '' 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான க ...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டுக்குழு தலைவராக பி.பி சவுத்ரி நியமனம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் ...

மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப ...

மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வீணடிக்கும் சபா – ஜக்தீப் தன்கர் கவலை பார்லிமென்ட் நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் பொது மக்களின் ...

வேற்றுமையில் ஒற்றுமை மிக்க நாட ...

வேற்றுமையில் ஒற்றுமை மிக்க நாடு இந்தியா : ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா என்றும், பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...