வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் இலவச மொபைல்போன் சேவை

 வெள்ள பாதிப்புக் குள்ளான காஷ்மீரில், தொலைத் தொடர்பு சேவையை மீண்டும் துவக்க, மத்திய அரசு மும்முரம் காட்டிவருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் 100 நாட்கள் சாதனைகுறித்து, டில்லியில் நிருபர்களிடம் துறை அமைச்சர் ரவி சங்கர்பிரசாத் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் முழு அளவில் துவக்க மத்திய அரசு மும்முரம்காட்டி வருகிறது. மொத்தமுள்ள 12,306 மொபைல் போன் டவர்களில் 6811 டவர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் 1208 டவர்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் இலவச மொபைல்போன் சேவையை பிஎஸ்என்எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவார காலத்திற்கு இந்தசேவை அமலில் இருக்கும். இதேபோல், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் இலவசமாக பேசிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளன.

அமைச்சகத்தின் சார்பில் இ கிரீட்டிங் முறை விரைவில் அமல்படுத்தப்படும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மூன்று ஐ.டி.,க்களில் (இந்தியன் டேலண்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் இந்தியா டுமாரோ) கவனம் செலுத்தப்படும். நாடுமுழுவதும் தொலைக் காட்சி சேவை விரிவுபடுத்தப்பட்டதை போன்று, பிராட் பேண்டு சேவையும் விரிவுபடுத்தப்படும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் டிராய் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படும். சைபர் குற்றங்களை தடுக்க தேசியசைபர் ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்படும். நீதித் துறையின் சுதந்திரம் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரையில் புனிதமானது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...