தமிழக அரசு டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே பாஸ்மார்க் வாங்கியுள்ளது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் மேயர்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திர ராஜன் தூத்துக்குடி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் 1967க்கு பிறகு தேசிய எழுச்சி என்பது பாஜக.,வினால் உருவாகி இருக்கிறது. முதல்வர் தூத்துக்குடிக்கு வந்தபோது தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தேசியகட்சிகள் உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட கூடாதா, பரீட்சை எழுதினால் தான் பாஸ் ஆகமுடியும். தேர்தலில் போட்டியிட்டால் தான் வெற்றி, தோல்வி பற்றி தெரியும்.
முதல்வர் தேர்தலில் யாரும் போட்டியிடகூடாது என்கிறார். இது என்ன நியாயம். தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை. நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல முதல்வர் தேர்தலிலும் போட்டியிடுவோம்.
இங்கு அதிமுகவுக்கு அமைச்சர்கள் வந்துதான் வாக்குகள் வாங்கவேண்டிய நிலை உள்ளது. எங்கள் கட்சி மத்திய அமைச்சர்கள் அவர்கள் தொகுதியில் மக்கள்பணியில் மட்டுமே கவனம்செலுத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக அரசு டாஸ் மாக்கை மட்டுமே கவனித்து பாஸ்மார்க் வாங்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் ஆதரவு ஆளும் கட்சிக்கு உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர் பிரபாகரன் என்பவர் அதிமுகவினரால் கடத்தப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையத்தில் புகார்செய்தால் அதிகாரிகல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்துகொண்டு வேட்பாளர் வீட்டில் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
அதிமுகவுக்கு தொடர்ந்து வாக்களித்து என்ன சாதனை செய்ய போகிறேர்கள். என்று கேள்வி எழுப்பினார்
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.