மீண்டும் இந்தியா உலகின் மிகப்பெரிய சக்தியாக மாறும். சீனாவை விட சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. நம் நாட்டில் உள்ள 1.25 பில்லியன் மக்கள்தொகையில் தொழில்முனைவோர்களின் திறமைகளை முறையாக பயன்படுத்தினால் இது நிச்சயம் நடக்கும்.
ஒரு நேரத்தில் இந்தியா 'கோல்டன் பேர்டு' என்றழைக்கப்பட்ட நாடுதான். ஆனால், இப்போது நாம் அந்த உயர்ந்த நிலையில் இருந்து கீழே விழுந்து விட்டோம். ஆனால், நாம் மீண்டு எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்தியா மற்றும் சீனா இரண்டும் ஒரே நேரத்தில் வளர்ச்சி காணப்போவதை நீங்கள் இனி பார்க்கப் போகிறீர்கள்.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த இருநாடுகளின் பங்களிப்பு தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா ஒன்றும் சீனாவை விட குறைந்து போய்விடவில்லை. இந்தியாவில் உள்ள தொழில்முனைவோர்களின் திறமைகளை நான் அறிவேன். அவற்றை முறைப்படுத்தும் திட்டங்கள் என்னிடம் உள்ளன. ஜனநாயக நாடுகளும் வளர்ந்து வருகின்றன. இந்தியாவும் வளர்ந்து வருகிறது. அப்படி இங்கு ஜனநாயகம் இல்லை என்றால், என்னை போன்ற ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரதமராக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.
சீனாவின் அத்துமீறல்கள் அண்டை நாடுகளுக்கு கவலையை அளிக்கிறது. சீனா சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் என நம்புகிறேன். இருந்தாலும், பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்தால் நாம் கண்ணை மூடிக்கொண்டிருக்க நாம் ஒன்றும் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேட்டியளித்தார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.