மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜக-சிவசேனை, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய பிரதான கூட்டணிகள் முறிந்ததால், இந்த தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையொட்டி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாண், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்களின் வேட்புமனுக்களை அன்றைய தினம் தாக்கல் செய்தனர்.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக சுமார் 7,401 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக, நாந்தேட் தொகுதியிலிருந்து 91 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாஜக 257 தொகுதிகளிலும் . மீதமுள்ள 31 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியினரும், காங்கிரஸ் 288 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 286 தொகுதிகளிலும், சிவசேனை 286 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.