தொலைக்காட்சி நிருபரிடம் ஆவேசம்

 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட்வதேரா, அரியானாவில் பூபிந்தர்சிங் ஹூடாவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தபோது சிகோபூர், குர்கான் ஆகிய நகரங்களில் அரசிடம் இருந்து குறைந்தவிலைக்கு நிலங்களை வாங்கி, அதேநிலங்களை தனியார்

ரியல்எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு 58 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்பட்டது. இதன் மூலம் வதேரா ரூ.44 கோடி அளவிற்கு ஆதாயம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அண்மையில் அரியானாவில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தமுடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநில பா.ஜனதா அரசு அறிவித்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு டெல்லி அசோகா ஓட்டலில் நடந்த ஒருநிகழ்ச்சியில் ராபர்ட் வதேரா கலந்துகொண்டார். அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மைக்கை வதேரா முன்பாக நீட்டி நில விவகாரம் குறித்து அவரிடம் கேள்விகளை எழுப்பினார்.

இதனால் ஆவேசம் அடைந்த வதேரா, இது தீவிர மான பிரச்சினையா? என்று 3 முறை தொடர்ந்து கேட்டார். மேலும் நீங்கள் என்ன பைத்தியமா? உங்களுக்கு என்ன ஆயிற்று? என்றும் கோபத் துடன் கேள்வி எழுப்பினார். அப்போது தொலைக் காட்சி நிருபர் வைத்திருந்த மைக்கை வதேரா கோபத்துடன் தட்டிவிட்டார்.

ராபர்ட் வதேராவின் இந்தசெயல் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா கூறுகையில், பிரபலமான மனிதர் ஒருவர் இது போன்று நடந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்ட வசமான ஒன்று என்றார்.

பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, வதேராவின் இந்தசெயலுக்காக அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்புபாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மஜித்மேன் கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக நாட்டில் கடினமான கேள்விகளை எதிர்நோக்கும் போது அரசியல்வாதிகள் இதுபோல் நடந்து கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டார்.

பா.ஜ.க தலைவர் சேஷாத்ரிசாரி நிருபர்களிடம் கூறுகையில், ''ஒருவேளை இந்தபிரச்சினையை மாநில அரசு தீவிரமாக கருதாது என்று வதேரா நினைத்தாரோ, என்னவோ?. ஆனால், மத்திய அரசும், அரியானா மாநில அரசும் இந்த நிலமுறைகேடு விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்'' என்று குறிப்பிட்டார்.

அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் இந்தசம்பவம் குறித்து கூறுகையில், இந்த விஷயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...