ஹெராயின் கடத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், கொழும்பு உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் மத்திய அரசின் தெளிவான நடவடிக்கையினால் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியிடம் ஞாயிற்றுக் கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய இலங்கை அதிபர் இதற்கான சமிச்சைகளை காட்டியுள்ளதாக தெரிகிறது.
ராமேசுவரத்தைச் சேர்ந்த எஸ்.மெர்சன், பி.ஆகஸ்டஸ், ஆர்.வில்சன், கே.பிரசாத், ஜே. லாங்லேட் ஆகிய 5 மீனவர்களும், இலங்கையைச் சேர்ந்த 3 பேரும் இலங்கை கடல்பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி கைது செய்யப் பட்டனர். அவர்களுக்கு எதிராக ஹெராயின் கடத்தியதாக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து, கொழும்பு உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 30ம் தேதி தீர்ப்புவழங்கியது. அதில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கும், இலங்கையை சேர்ந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்தத்தீர்ப்பை எதிர்த்து ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீனவர்களின் உறவினர்களை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நேரில் சந்தித்து, இந்தியாவுக்கு அவர்களை கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார்.
இலங்கையின் வெலிக் கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகமீனவர்கள் 5 பேரையும், அந்நாட்டுக்கான இந்தியத்தூதர் ஒய்.கே. சின்ஹா நேரில்சென்று சந்தித்தார். இந்தவழக்கில் மேல்முறையீடு செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.
இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபட்சயின் செய்தித்தொடர்பாளர் மோகன் சமரனாநாயகே, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் "இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை தொலை பேசியில் ஞாயிற்றுக் கிழமை தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவரிடம், இந்தியா – இலங்கை இடையே 2010ம் ஆண்டு செய்து கொள்ளப் பட்ட தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தின்கீழ், தமிழக மீனவர்கள் 5 பேரையும் இந்தியசிறைக்கு மாற்றும் வாய்ப்பு குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார்' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நல்லமுறையில் இருந்ததாகவும். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை, இந்தியாவுக்கு மாற்றமுடியாது. ஆனால், இலங்கை அதிபரோ அல்லது மேல் முறையீடு நீதிமன்றமோ, மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் சிறை தண்டனையாக குறைக்கும் பட்சத்தில், இந்தியச் சிறைக்கு அவர்களை மாற்ற கடினமாக இருக்காது என்பதால் தண்டனை மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. .
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.