இந்த ஆண்டின் சிறந்த மனித ருக்கான 'டைம்' இதழின் போட்டியில் பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் வருடம் வருடம் உலகின் சிறந்தமனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான வாக்கெடுப்பு இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை 9.8 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அமெரிக்காவின் பெர்குசன் நகரில் கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக்கொன்றதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த போராட்டக் காரர்கள் 10.8 சதவீத வாக்குகளுடன் முதலிடம் வகித்தனர்.
இந்நிலையில், மோடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். வியாழக்கிழமை நிலவரப்படி, பெர்குசன் போராட்டக்காரர்களை பின்னுக்கு தள்ளி 12.8 சதவீத வாக்குகளை பெற்று பிரதமர் முதல் இடத்தில் உள்ளார். பெர்குசன் போராட்டக்காரர்கள் 10.1 சதவீத வாக்குகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல 3-ம் இடத்தில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடும் ஜோஸ்வா வாங் உள்ளார். அமைதிக்கான நோபல்பரிசை வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா 4-ஆம் இடத்திலும் உள்ளார்.
எபோலா நோய் எதிர்ப்புக்காக போராடிவரும் மருத்துவகுழு 5-வது இடத்திலும் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 6-ஆம் இடத்திலும் . அமெரிக்க அதிபர் ஒபாமா11-வது இடத்திலும் உள்ளனர்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.