காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் தாக்குதல்

 காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்த போதிலும், இதுவரை நடந்து முடிந்த 2 கட்ட வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 71 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த நிலையில், 3-வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது.

வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஊரி என்ற இடத்தில் வருகிற திங்கட்கிழமை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேச இருக்கிறார்.

இந்த நிலையில், அங்குள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஊரி பகுதியில் உள்ள மோக்ரா என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த ராணுவ முகாம், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நேற்று அதிகாலை 3.10 மணிக்கு ஆயுதங்களுடன் வந்த 6 தீவிரவாதிகள், அந்த முகாம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதிரடிப்படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது முதலில் ஒரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டான். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் மற்றொரு வாகனத்தில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

இந்த சம்பவத்தின் போது ஒரு வாகனம் கவிழ்ந்ததில் அதில் இருந்த வீரர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். அதற்குள் முகாமுக்குள் புகுந்து விட்ட தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி கையெறி குண்டுகளையும் வீசினார்கள். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் மற்றும் ராணுவ வீரர்களும் உடனே உஷாராகி பதிலடி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது முகாமில் உள்ள ஒரு கூடாரம் தீப்பிடித்ததில் அதில் இருந்த வீரர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே 6 மணி நேரத்துக்கும் மேலாக கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று காலை 9.30 மணி அளவில்தான் சண்டை முடிவுக்கு வந்தது.

இந்த சம்பவத்தில், ஒரு ராணுவ அதிகாரி (லெப்டினன்ட் கர்னல்) உள்பட8 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். அவர்களில் 4 பேரின் உடல்கள் பலத்த தீக்காயம் அடைந்து கருகின. மேலும் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசாரும் குண்டு பாய்ந்து இறந்தனர்.

இறந்த ராணுவ அதிகாரியின் பெயர் சங்கல்ப் குமார். இவர் பஞ்சாப் படைப்பிரிவைச் சேர்ந்தவர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.

அவர்களிடம் இருந்து 6 ஏ.கே.47 துப்பாக்கிகள், 2 சிறிய ரக துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், 32 கையெறி குண்டுகள், இரவிலும் பார்க் கும் வசதி கொண்ட 2 பைனாகுலர்கள், 4 ரேடியோக்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து சமீபத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தீவிரவாதிகள் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட உணவுப் பொட்டலங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, "தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கிடந்த தீவிரவாதிகளின் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட உணவுப் பொட்டலங்களில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளது. பொதுவாக, இத்தகைய உணவுகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்துவர்.

தீவிரவாதிகள், அதிக அளவில் உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் ஆகியனவற்றை கொண்டுவந்திருப்பதை பார்க்கும்போது அவர்கள் நீண்ட நேரம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம்.

மேலும் தலைநகர் ஸ்ரீநகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்க தளபதி உள்பட 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான சவுராவில் அகமதுநகர் என்ற இடத்தில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று பிற்பகல் போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்த போது 2 பேருடன் வேகமாக வந்த ஒரு கார் நிற்காமல் சென்றது. உடனே போலீசார் அந்த காரை விரட்டிச் சென்றனர். அதில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரில் இருந்த ஒருவன் குண்டு பாய்ந்து பலி ஆனான். அவனிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள். மற்றொருவன் தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்தான். அவனையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளில் ஒருவன் பெயர் காரி இஸ்ரார் என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த அவன் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதிகளில் ஒருவனாக விளங்கியவன் என்றும் காஷ்மீர் மாநில டி.ஜி.பி. கே.ராஜேந்திரா தெரிவித்தார். பல வழக்குகள் தொடர்பாக காரி இஸ்ராரை போலீசார் ஏற்கனவே தேடி வந்ததாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

தெற்கு காஷ்மீரில் டிரால் என்ற இடத்தில் உள்ள பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை நோக்கி தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 பேர் பலி ஆனார்கள். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேபோல், சோபியன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது, தீவிரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனர். ஆனால் இதில் யாருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

இந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி அவரது அதிகாரபூர்வ சமுக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

அம்மாநிலத்தில் தற்போது நிலவும் நம்பிக்கையையும், அமைதியையும் சீர்குலைக்கும் முயற்சி இது என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் நலனுக்காகவும், பாதுக்காப்புக்காகவும் உயிரிழந்துள்ள வீரர்களை நாடு என்றென்றும் நினைவில் கொள்ளும் என்றும் கூறி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...