‘தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். யாரோ ஒருவரை என்கவுன்டர் செய்தால் சட்டம் ஒழுங்கு சரியாகிவிடும் என்ற தோற்றத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. துப்பாக்கியை வைத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது. சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்க முடியும்.
போலீசார் அதனை செய்ய முடியாது. செந்தில் பாலாஜி ஜாமினில் தான் வந்துள்ளார். விடுதலை ஆகவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் அது ஒழிப்பு மாநாடு ஒரு அரசியல் நாடகம். குஜராத், பீஹாரில் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது? மது உற்பத்தி ஆலைகளை திமுகவினர் நடத்துவதால் தமிழகத்தில் மது ஒழிப்பு சாத்தியமில்லை. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |