பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 20 ந்தேதி சென்னை வருகிறார். அவர் பிரமாண்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். 21ந் தேதி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.என்று திருச்சியில் கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:–
மத்தியில் பாஜக. அரசு பொறுப்பேற்ற பின்பு தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறைந் துள்ளது. இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் விடுதலை பெற்று ராமேசுவரம் திரும்பி உள்ளனர். இது பிரதமர் மோடி அரசுக்கு கிடைத்தவெற்றி.
இலங்கை மீனவர்கள், இந்திய பகுதிகளிலும், இந்திய மீனவர்கள், இலங்கை கடல்பகுதியிலும் மீன் பிடித்து வந்தகாலம் தொடர வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் விருப்பம். இதற்காக மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காணப்படும். கச்சத்தீவு பிரச்சினையும் விரைவில் தீர்ந்துவிடும்.
நாளை முதல் 14ந் தேதி வரை சென்னையில் பாரதியார் தின விழா நடைபெற உள்ளது. இதில் 13ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார். திருவள்ளுவர் தினத்தை நாடுமுழுவதும் கொண்டாட வேண்டும் என கூறிய தருண் விஜய் எம்.பி. வருகிற ஜனவரி மாதம் கன்னியா குமரியில் இருந்து ஒரு யாத்திரையை தொடங்க உள்ளார்.
பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 20ந் தேதி சென்னை வருகிறார். அவர் பிரமாண்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். 21ந் தேதி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் பா.ஜ.க.வில் 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதனை 10 மடங்காக உயர்த்த லட்சியமாக கொண்டுள்ளோம். அதற்கான சூழல் உள்ளது. திருச்சியில் வருகிற 19ந் தேதி ஒரேநாளில் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். சுப்பிரமணிய சாமி கூறும் கருத்துகள் அதிகாரபூர்வ கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக.வின் தலைவர்கள் கூறும் கருத்துகள் மட்டுமே அதிகாரப் பூர்வ கருத்தாகும்.
பா.ஜ.க. கூட்டணியில் வைகோவை சேர்க்க அவரிடம் பேசியவர்கள் யாரும் எதிராக பேசவில்லை. கூட்டணியை விட்டுவிலக வைகோ ஏற்கனவே முடிவுசெய்து காரணத்தை தேடியிருக்கிறார். அவர் வேறு பக்கம் போவாரோ? என சந்தேகம் உள்ளது. கூட்டணியை விட்டு விலக நண்பர் வைகோ பயன் படுத்திய வார்த்தைகள் கடினமாக இருந்தது. அவர் இத்தகைய காரணங்களை கூறியது வருத்தம் அளிக்கிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விவரமானவர். சுப்பிரமணிய சாமியின் கருத்தை அவர் பெரிதாக கருத மாட்டார். அதனால் கூட்டணியை விட்டு அவர் வெளியேறுவார் என கருதவில்லை இவ்வாறு அவர் கூறினார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.