துப்பாக்கி ஏந்தி போராடுவதைவிட ஏர் கலப்பையை ஏந்தி உழைத்தால் தான் வளர்ச்சியை எட்டமுடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான 5வது கட்ட ஓட்டுப்பதிவு வரும் 20-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் நேற்று நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மோடி கூறியதாவது:
துப்பாக்கி பட்டனைஅழுத்தினால் ஒரு உயிரை எடுக்கமுடியும். ஆனால் ஓட்டுப் பதிவு இயந்திரத்தை அழுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றினால் நாடு வளர்ச்சியடையும். துப்பாக்கிகளை விடுத்து, ஏர் கலப் பையை கையில் எடுத்து உழைத்தால் வளர்ச்சி என்ற அறுவடைசெய்யலாம்.வாஜ்பாய் தலைமையிலான பாஜக., ஆட்சியில் மத்தியில் இருந்த போது தான், பழங்குடியினர் நலத்துறைக்கென தனி அமைச்சகமும், பட்ஜெட் ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டன.
பழங்குடியின மக்களின் நிலப் பாதுகாப்பு சட்டத்தில் மத்திய அரசு மாற்றம்கொண்டு வரப்போவதாக சில கட்சிகள் வேண்டுமென்றே பொய்யான குற்றச் சாட்டுகளை எடுத்துரைக்கின்றன.எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டு உண்மையென்றால் பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலங்களான ம.பி., சத்தீஸ்கரில் பாஜக., ஆட்சியைக் கைப்பற்றியிருக்க இயலாது.பாஜக., மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைத்தான் அந்த மாநிலத் தேர்தல்முடிவுகள் பிரதிபலித்திருக்கின்றன.
பழங்குடியினர் நலனை உறுதிப்படுத்தாமல் தேசத்தை வலுப்படுத்தமுடியாது. அவர்களுக்கு சொந்தமான நிலங்களை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. . இங்கு நிலக்கரி வளம் அதிக அளவில் உள்ளது.
தற்போது அந்தத் துறை இருண்டு கிடக்கிறது. அதனை முறையாகப் பயன் படுத்தினால் நாட்டிற்கே வெளிச்சம் கொண்டுவரலாம்.
மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது தந்தை சிபுசோரன் ஆகியோர், தங்களது சொந்த கஜானாவை நிரப்பிக் கொண்டார்களே தவிர, மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் வளர்ச்சியடையவும் நிலையான ஆட்சி அமையவும் பாஜகவை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று நரேந்திர மோடி பேசினார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.