இரு மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசுக்குக் கிடைத்த வரவேற்பாகும். முதல்முறையாக ஜார்க்கண்டில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜவுக்கு கிடைத்துள்ளது. காஷ்மீரில் புதிய ஆட்சி அமைவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வாய்ப்பை பாஜவுக்கு மக்கள் அளித்துள்ளனர் என்று பாஜ தேசியத் தலைவர் அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் அமித் ஷா நேற்று கூறியதாவது: பாஜவுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்த இரு மாநில மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 6 மாதங்களில் மேற்கொண்ட பல்வேறு நல்ல திட்டங்களுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் இதுவாகும். ஆனால் இந்த அரசு எதையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
மக்களின் மேம்பாடு, நலன் ஆகியவற்றுக்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கிடைத்தவரவேற்பு இது என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இரு மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 அல்லது 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எங்களுடைய இலக்குக்கு கிடைத்துள்ள பலன் இந்த தேர்தல் முடிவு. ஜார்க்கண்ட் மாநிலம் உருவான பிறகு கடந்த 14 ஆண்டுகளில் முதல்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சி அமைய உள்ளது. அந்த வாய்ப்பை பாஜவுக்கு அளித்துள்ள மக்களுக்கு நன்றியை தெரிவித்துள் கொள்கிறோம். பிரசாரத்தின்போது கூறியபடி மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியையும் அளிக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் இரண்டாவது பெரியக் கட்சியாக வலுவான நிலையில் உள்ளோம். கடந்த தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி என்ற நிலையில் இருந்து 25 தொகுதிகள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளோம். மாநிலத்தில் வாக்கு சதவீதமும் மிகப் பெரிய ஏற்றத்தைக் கண்டுள்ளது. இந்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளையும் பாஜ ஏற்றுக் கொள்கிறது.என்றார்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.