தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை கருத்தில்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, கட்சித்தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள், வருகிற பிப்ரவரி மாதமோ அல்லது அதற்க்கு பிறகோ தமிழகம் வரவுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் பாஜக சார்பில் உறுப்பினர்சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலுக்குள் பாஜக.,வை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் தனியாக பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை திமுக, அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் நல்லாட்சி அமையவும், நீண்ட காலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் பாஜகவால் மட்டுமே முடியும்.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை மிக முக்கியமானதாக கருதுகிறோம். மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் வரும் பிப்ரவரி அல்லது அதற்குப்பிறகு தமிழகம் வரவுள்ளனர். மத்திய அமைச்சர்களும் வரவுள்ளனர்.
தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் தலைவர்களின் வருகையின் போது அறிவிக்கப்பட இருக்கின்றன. பிரதமர் வருகையின் போது பல்வேறு அரசியல் கட்சிகளில் தீவிரமாக செயல்பட்ட முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் பிறகு தெரிவிக்கப்படும் என்றார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.