தமிழகத்தில் பாஜக-வில் தினமும் 25 ஆயிரம் பேர் இணைவதாகவும், வரும் 1-ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை மேலும் அதிகப்படுத்தப் போவதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
பத்திரிகயாளர்களை தமிழிசை சந்தித்து பேசுகையில், "மத்தியில் ஆளும் பாஜக அரசு கவர்ச்சி அரசியலை நடத்தாமல் கொள்கைபிடிப்போடு அரசியல் நடத்தும் காரணத்தினால் தமிழகத்தில் இருந்து நிறையபேர் எங்கள் கட்சியில் இணைகின்றனர். மதம் சார்ந்த பிரச்சினைகள் மட்டும் அல்லாமல், மனிதம் சார்ந்த பிரச்சினைகளை நாங்கள் முன்னெடுத்து செல்லும் காரணத்தினால் பா.ஜ.க-வில் தமிழகத்தில் இருந்து சராசரியாக தினமும் 25 ஆயிரம் பேர் உறுப்பினராக இணைகிறார்கள். மேலும் வரும் 1-ஆம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி எண்ணிக்கையை அதிகப்படுத்த உள்ளோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. ஈ.வி.எஸ் அவர்கள் தமிழகத்தில் பாஜக. எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். கண்ணாடி அணிந் திருந்தும் அவருக்கு பாஜக. வளர்ந்து கொண்டிருப்பது தெரிய வில்லை போல இருக்கிறது அவரது பேச்சு. காம ராஜரை மறந்து குஷ்புவை மட்டும் வைத்து கட்சியை நடத்தும் நிலையில் தமிழக காங்கிரஸ்கட்சி உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிதான் துண்டுதுண்டாக உடைந்துள்ளது. முதலில் அவர் கட்சியைப் பாதுகாத்துக்கொண்டு பலப்படுத்தி கொள்ளட்டும்.
போக்கு வரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்க்கவேண்டும். மழைகாலம் தொடங்கி விட்டதால் சென்னையில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. எனவே, சாலையை செப்பனிடும் பணியில் மாநகராட்சி ஈடுபடவேண்டும்" என்று கூறினார்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.